கரித்தாஸ் நிறுவன ஊழியர் ஒருவர் வன்னியில் கொல்லப்பட்டுள்ளார்.
ஆவுஸ்திரேலிய கரித்தாஸ் நிறுவனத்தின் உள்ளுர் ஊழியர் ஒருவர் இன்று காலை வன்னிப்பிரதேசத்தில் கொல்லப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கரித்தாஸ் நிறுவனத்தின் பிரதேச மேற்பார்வையாளர் Jack de Groot அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், வன்னியில் யுத்த சூனியப் பிரதேசத்தில் சிக்கியுள்ள மக்களுக்கான நிவாரணப்பொருட்களை வழங்குவதில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எமது சாரதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழ்துள்ளமை ஆழ்ந்த கலையளிக்கின்றது. இப்பரிதாபகரமான மரணத்துடன் அங்கு உயிரிழக்கும் அப்பாவி பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வன்னியில் இடம்பெயர்ந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிவாரண நிதியாக அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒரு கோடி அமெரிக்க டொலர்களை இன்று ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment