Friday, May 22, 2009

இந்திய மருத்துவக் குழு பெருந்தொகையான மருந்துப் பொருட்களுடன் இலங்கை விரைகின்றது.

வன்னியுத்தத்தில் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களின் வைத்திய நலன்களை கவனிக்கும் பொருட்டு 8 வைத்தியர்களை உள்ளடக்கிய 27 பேர் கொண்ட வைத்தியக் குழுவை இந்திய அரசு பெருந்தொகையான மருந்துப்பொருட்களுடன் அனுப்பி வைக்கின்றது.

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஐஎல் 76 ரக விமானத்தில் விங்கொமாண்டர் எச்-பி குமார் அவர்கள் 25 மெற்றிக் தொன் மருந்துப் பொருட்களையும் வைத்தியகுழுவையும் ஏற்றிக்கொண்டு இன்று காலை 09.30 பாலம் விமானப்படைத் தளத்தில் புறப்பட்டதாக பிரிகேடியர் பி. சச்தேவா ஊடகவியலாளர்களிடம் தெரியவித்துள்ளார்.

110 கட்டில்களுடன் புல்மோட்டையில் வைத்தியசாலை ஒன்றை இந்திய அரசு நிறுவியிருந்தது யாவரும் அறிந்தது. அவ்வைத்தியசாலை வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களின் வைத்திய தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு மனிக்பாம் இடைத்தங்கல் முகாமிற்கு இடமாற்றப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment