செட்டிக்குளம் இடைத்தங்கல் முகாமிற்கு பான் கீ மூன் விஜயம் .
இலங்கை வந்துள்ள ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் செட்டிக்குளம் இடைத்தங்கல் முகாம் பகுதிக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்டார். அவரது வவுனியா விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று பிற்பகல் ஜனாதிபதியைச் சந்தித்த அவர், இலங்கையில் 3 தசாப்தங்களாக இடம்பெற்று வந்த யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டமை தொடர்பான தனது கருத்தை தெரிவித்ததுடன் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களின் நிவாரணத்திற்காக ஜனாதிபதி மேற்கொண்டிருக்கின்ற விடயங்களை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஐ.நா செயலாளர் நாயகத்தின் வேண்டுதல்களுக்கு இணங்கிய ஜனாதிபதி, இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களின் நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதற்கு சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கு முழு அனுமதி வழங்கப்படும் என்பதுடன் அம்மக்களை 180 நாட்களில் குடியமர்த்தவும் அவர்களுடைய அரசியல் பிணக்குகளைத் தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment