ஆர். சம்பந்தன் தலமையிலான தேசிய கூட்டமைப்பு குழுவினர் தமிழக முதலமைச்சர் எம். கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர். சந்திப்பு முடிவில் பத்திரிகையாளர்களுக்கு கருத்து தெரிவித்த சம்பந்தன், இலங்கை தமிழர்களுக்கான அரசியல் தீர்வு சம்பந்தமாகவும் இலங்கையின் அபிவிருத்தி சம்பந்தமாகவும் கலந்துரையாடினோம் எனவும் இவையனைத்திற்கும் தமிழக அரசு முழு ஒத்துழைப்பும் தருவதாக முதலமைச்சர் தெரிவித்தார் எனவும் கூறியுள்ளார்.
இலங்கை மக்களுடைய அபிவிருத்தி விடயத்தில் இந்திய அரசு முற்றுமுழுதாக கவனம் செலுத்தியுள்ள நிலையில் கூட்டமைப்பினர் இந்திய அரசிடம் இதுதொடர்பாக பேசவேண்டிய அவசியம் இல்லை எனவும் இவர்கள் உடனடியாக நாடு திரும்பி வவுனியா முகாம்களில் தங்கியுள்ள மக்களிடம் சென்று அவர்களின் அன்றாட பிரச்சினைகளை கண்டறிந்து, அவை தொடர்பாக உள்ளுர் நிர்வாகத்தினருடன் பேசுவதனையே அங்குள்ள மக்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரியவருகின்றது. அத்துடன் இலங்கை அரசியல் தீர்வு விடயத்தில் கூட்டமைப்பினருக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து வாய்ப்புக்களையும் அவர்கள் தட்டிக்கழித்து புலிகளை இலங்கையில் தக்க வைத்துக்கொள்வதில் காட்டிய ஆர்வம் மன்னிக்க முடியாத வரலாறாக இருக்கின்ற நிலையில் மீண்டும் மக்களை ஏமாற்ற கூத்தமைப்பினர் புதியதோர் வேடம் பூண முனைவதையே இச்சந்திப்பு எடுத்துக்காட்டுகின்றது.
இச்சந்திப்பில் ஆர். சம்பந்தன் உட்பட ஏனைய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சேனாதி ராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment