Wednesday, May 6, 2009

இடைத்தங்கல் முகாம்களில் இடம்பெறுகின்ற சேவையை பாராட்டியது பிரித்தானியப் பாரளுமன்றக் குழு

இலங்கைக்கு 05.05.2009 உத்தியோக பூர்வ தரிசனத்தை மேற்கொண்ட பிரித்தானியப் பாராளுமன்றக் குழு மெனிக் பாம் நலன்புரி நிலயத்தின் மனிததேவைகள் அபிவிருத்தி முன்னேற்றங்களைப் பார்வையிட்டுள்ளது. அக் குழு, இடம்பெயர்ந்து அரசகட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்த மக்களுக்கு ஆறுதல் அளிக்க அரசாங்கம் மேற்கொண்டுவரும் பகீரதப் பிரயத்தனங்களையும் செயற்பாடுகளையும் மெச்சியுள்ளது.

அரசாங்கம் தொடர்ந்தும் வாழ்வாதாரப் பெருட்களை எவ்வித தங்கு தடையின்றி வழங்குவதற்கு உத்தரவாதமளித்ததோடு அவ் நலன்புரி நிலயங்களிலுள்ள இளைஞர்களுக்கு வாழ்வதற்கு வேண்டிய பயிற்சிநெறிகளை அளிப்பதாகவும் உத்தரவாதமளித்துள்ளது.

நேற்று வவுனியா சென்றடைந்த இக் குழுவை வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்எம்.சாள்ஸ் வரவேற்று வசதிகள் செய்து கொடுத்தார். அத்துடன் இவர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி மகிந்தா ராஜபக்ஸ்ச, இலங்கைத் தேசத்திற்கு, அது பெற்ற நவீன ஜனனாயக தேசம் என்ற கீர்த்தியை மழுங்கடிக்க புலி செய்யும் பொய்பிரசாரங்களையும் சேறடிப்புகளையும் திரித்த தகவல்களையும் சர்வதேச சமூகங்களுக்குத் தெளிவாக விளக்கிக் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com