யுத்த சூனிய பிரதேசத்தில் கடைசிப் பொதுமகனும் மீட்கப்பட்டுவிட்டார் - பாதுகாப்பமைச்சின் உயர் அதிகாரி.
இன்று காலையுடன் வன்னியில் புலிகளின் வன்பிடியில் சிக்கியிருந்த கடைசிப் பொது மகனும் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார். யுத்த சூனியப் பிரதேசத்தில் மேலும் 25000 மக்கள் சிக்கியுள்ளதாக கடற்புலிகளின் தளபதி சூசை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை தொடர்பாக அவ்வதிகாரியிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், வன்னியில் புலிகளின் பிடியில் இருந்த சகல நிலப்பரப்புகளும் மீட்கப்பட்டுள்ளது. அங்கு சுமார் 400 சதுர மீற்றர் நிலப்பரப்பு சுத்தம் செய்யப்படவேண்டியுள்ளது. அப்பணி இன்னும் ஒன்று தொடக்கம் இரண்டு மணித்தியாலயங்களில் முடிவுறும் எனவும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment