இலங்கை வந்தடைந்த ஐ.நா செயலாளர் நாயகம் மனிக்பாம் பகுதிக்குச் செல்லவுள்ளார்.
ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று காலை இலங்கை வந்தடைந்துள்ளார். அவர் இன்று நாட்டின் ஜனாதிபதியை கண்டியில் சந்திக்கவுள்ளதாகவும், அத்துடன் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியுள்ள மனிக்பாம் பிரதேத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
பான் கீ முன் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுடன் பேசுகையில், இலங்கையிலே இடம்பெற்று வந்த பயங்கர யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. இது இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு சமாதானத்தை கட்டியெழுப்பும் நேரம். யுத்தத்திலே பாதிக்கப்பட்ட மக்களையும், இடம்பெயர்ந்துள்ள சுமார் மூன்று லட்சம் மக்களையும் இட்டு கவலையடைகின்றேன். என்னுடைய இவ்விஜயம் அவர்களுடைய மீள் கட்டுமானத்திற்கும் அபிவிருத்திக்கும் உதவும் என கருதிகின்றேன். அதன் நிமிர்த்தமே நான் இங்கு வந்துள்ளேன் என்று கூறிய அவர், ஓர் நீண்ட அறிக்கையை விடுத்தார். அவ்வறிக்கையின் முழு விபரம் விரைவில்
0 comments :
Post a Comment