ஐசிஆர்சி ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
யுத்த சூனியப் பிரதேசத்தில் செயல்பட்டுவந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊழியரான மயூரன் சிவகுருநாதன் என்பவர் முள்ளிவாய்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற எறிகணைத்தாக்குதல் ஒன்றின்போது உயிரிழந்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பேச்சாளர் சரசி விஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதலில் அவரது தாயாரும் கூடவே உயிரிழந்துள்ளார். மயூரன் ஐசிஆர்சி யின் நீர்வழங்கள் பிரிவில் தொழில்நுட்பவியலாளராக பணியாற்றியவர். யுத்த சூனியப்பிரதேசத்தில் ஐசிஆர்சி மாத்திரமே செயல்படுகின்றது. அங்கு எமது 20 ஊழியர்கள் செயலாற்றுகின்றனர். இதுவரை எமது 3 ஊழியர்கள் அங்கு உயிரிழந்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment