Thursday, May 14, 2009

உலகை ஏமாற்றும் புலிகளும், துணைபோகும் கத்தோலிக்க பாதிரியார் சங்கமும். அதிர்வின் பொய்ப்பரப்புரை

புலிகளின் சில இணையத்தளங்கள் நேற்று (13.05.2009) நெஞ்சை உருக்குகின்ற படங்களை வெளியிட்டிருந்ததுடன் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தி ஒன்றையும் வெளியிட்டிருந்தது. அச்செய்தி யாதெனில், இலங்கையின் வடக்கே, வன்னியில் இடம்பெறும் யுத்தத்தில் புலிகளை நிராகரித்து அரச கட்டுப்பாட்டினுள் வந்துள்ள மக்களை அரச தரப்பினர் கடத்திச் சென்று பொலநறுவைப் பிரதேசத்தில் உள்ள மறைவிடம் ஒன்றில் வைத்து அவர்களது உடல் அவயவங்களை (சிறுநீரகம், இருதயம், நுரையீரல்) கழற்றிய பின்னர், உடலங்கள் குளிரூட்டப்பட்ட சவ அறை ஒன்றில் வைக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் இவ் உடலங்களை பொலநறுவைப் பிரதேசத்தில் உள்ள இராணுவ அதிகாரி ஒருவரது மகளின் ஞானஸ்தான தீட்சை வைபவத்திற்கு சென்றிருந்த கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் கண்ணால் கண்டு அவற்றை படமெடுத்து வந்தாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இதே போன்றதோர் செய்தியை கடந்த 24.04.2009 அன்று கிளிநொச்சியில் இயங்கும் மர்மச் சிறைச்சாலை எனும் தலைப்பில் வெளியிட்டு இருந்ததுடன் அச்செய்திகளுக்கான இணைப்பினை பிரத்தியேகமாக பல இணையத்தளங்களுக்கும் தனிநபர்களுக்கும் அனுப்பியும் வைத்திருந்தனர்.

http://www.tamilwin.org/view.php?2aSWnBe0d1j0g0ecGG7B3b4j9EE4d3g2h2cc2DpY3d436QV3b02ZLu2e

http://escapefromindia.wordpress.com/2008/04/17/shocking_images_from_india/

மேற்படி இணையத்தள உரிமைகயாளர்களால் அனுப்பட்ட இரு இணைப்புக்களுமே மேலே காணப்படுகின்றன. இதில் இரண்டாவது இணைப்பு இந்தியாவைத் தளமாக கொண்ட ஒர் இணையமாகும். இந்தியாவில் எவ்வாறு மரணபரிசோதனை செய்கின்றார்கள் என்பதை எடுத்துரைக்கும் படங்களை அவ் இணைப்பில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அப்படங்களை எடுத்த புலிகள் தமது வழமையான பொய்பிரச்சாரங்களுக்கு பிரயோகித்துள்ளனர்.

இது ஓர் சாதாரண விடயம் அல்ல. புலிகளது மனசாட்சிக்கு அப்பாற்பட்ட பொய்பிரச்சாரம் என்பதை விட புலிகள் எவ்வாறு தமிழ் மக்களை இத்தனை காலமாக ஏமாற்றி வந்திருக்கின்றார்கள் என்பதற்கு இது சிறந்த உதாரணமாகும். இரண்டாவது இணைப்பில் அப்படங்களுக்குரிய விளக்கங்கள் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டிருக்கின்ற நிலையில், புலிகள் தமிழ் மக்களை எவ்வாறு எடைபோட்டிருக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது.

தமிழ் இணையங்களை வாசிக்கின்ற தமிழர் எவருக்கும் ஆங்கிலத்தை வாசித்து விளங்கிக்கொள்ளும் தகமை இல்லை என்பது புலிகளின் கணிப்பாக இருக்க வேண்டும் அல்லது இச்செய்தியை முதன்முதலில் பிரசுரித்த அதிர்வு இணையத்தள நிர்வாகத்தினருக்கு ஆங்கில மொழி தெரியாதிருக்க வேண்டும்.

இரண்டாவது விடயத்தில் கூறியதுபோல், அவர்கள் ஆங்கிலமொழி தெரியாமல் தவறாக வழிநாடாத்தப்பட்டு விட்டார்கள், பாவங்கள் என இலகுவாக விட்டு விடமுடியாது. காரணம் அச்செய்தி கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரசுரிக்கப்பட்ட செய்தி என்பது தெளிவாக தெரிகின்றது. எனவே இவ் இணையத்தளத்தினர் திட்டமிட்ட முறையில் மக்களை மந்தைகளாக்குகின்றனர் என்பது திண்ணம்.

பொலநறுவை குளிருட்டப்பட்ட பிரேத அறை மற்றும் கிளிநொச்சில் இயங்கும் மர்மச் சிறைச்சாலை போன்ற செய்திகளின் பின்னால் தமிழ் மக்களுக்கு பின்னப்பட்டிருந்த சதிவலைக்கு சில இணையத்தளங்கள் வெளிச்சம் போட்டுக்காட்டிய போது அச்செய்தியை பிரசுரித்திருந்த இணையங்கள் யாவும் சர்வசாதாரணமாக அச்செய்திகளை தமது இணையங்களில் இருந்து நீக்கியுள்ளன. ஆனால் அதிர்வு இணையமானது கைகூப்பி மன்னிப்பு கோரி அதற்கு ஓர் செய்தியை வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் ஒரு பொய்யை மறைக்க எத்தனை பொய்களைச் சொல்கின்றார்கள் என்பததை புரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.


புலிகள் இத்தனை காலங்களும் இனவாதம் பேசி இனவாதத்தை தூண்டி பிழைப்பு நடாத்தினர். ஆனால் தற்போது மதங்களுக்கிடையில் பிளவுகளையும் மோதல்களையும் உண்டுபண்ண முயற்சிக்கின்றனர்.

மேற்படி விடயத்தை ஓர் கத்தோலிக்க பாதிரியார் தெரிவித்ததாக கூறுவதன் முதலாவது நோக்கம், இலங்கையில் உள்ள பௌத்த மக்களுக்கு கத்தோலிக்க பாதிரிமாரை புலிகளின் புலனாய்வு ஏஜெண்டுகள் என காண்பித்து அவர்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவதும், பாதிரிமார் இத்தகைய கொடுமைகளைக் கண்ணால் கண்டும் தமது வாழ்வில் கொண்ட ஆசை காரணமாக வெளிஉலகிற்கு சொல்லத் தயங்குகின்றனர் என்றும் இவர்கள் உண்மையில் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள் அல்ல என்ற செய்திகளையும் பக்குவமாக மக்களுள் திணிப்பதுவுமாகும்.

எனவே கத்தோலிக்க மக்களும் கத்தோலிக்க பாதிரியார் சங்கமும் இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் விளக்கம் கோரவேண்டும். அவ்வாறு கத்தோலிக்க பாதிரியார் சங்கம் செய்யத்தவறும் பட்சத்தில் அவர்கள் புலிகளின் பொய்பிரச்சாரங்களுக்கு துணைபோகின்றார்கள் என்று கூறினால் அதில் தவறு இருக்காது என கருத இடமுண்டு.

No comments:

Post a Comment