Tuesday, May 12, 2009

பிரித்தானியாவில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் மீது தமது பார்வையைத் திருப்பும் பிரித்தானிய அரசு

பிரிட்டனில் வாழும் இலங்கைத் தமிழர்களும் அவர்களுக்கு ஆதரவானவர்களும் லண்டனில் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டம், பேரணிகளுக்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கண்டனக்குரல்கள் வெளியாகியுள்ளன. போராட்டக்காரர்கள் தமது நடவடிக்கைகள் மூலம் நாடாளுமன்ற சதுக்கத்தை கைப்பற்றி தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக நாடாளுமன்றத்தின் மக்கள் அவையின் சபாநாயகர் மைக்கேல் மார்ட்டின் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இவர்களின் இந்த நடவடிக்கைக்கள் மற்ற நியாயமான ஜனநாயக ரீதியிலான போராட்டக்காரர்களின் உரிமைகளைப் பறிப்பதாக இருப்பதாகவும் அவர் கூறினார். தமிழ் போராட்டக்காரர்கள் காரணமாக தமது செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாக பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மிடம் புகார் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த போராட்டக்காரர்களுக்கு 50 பேர் வரை குழுமலாம் என்று அனுமதி அளித்தால் 50 பேர் வரை தான் குழும வேண்டும் என்று கண்டிப்பு தெரிவித்த மார்டின் அவர்கள். அதற்கு பதிலாக நாடாளுமன்ற சதுக்கத்தில் கூடாரங்கள் அமைத்துக் கொள்வது. உணவு கொண்டுவருது என்பதெல்லாம் போராட்டத்திற்கான அனுமதிகளாக ஆகாது என்றும் கண்டித்தார்.

நாடாளுமன்ற சதுக்கத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும், தலைநகரின் மையப்பகுதியை செயலிழக்கச் செய்யும் இவர்களின் இந்த செயல்களும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று குற்றம் சாட்டிய எதிர்கட்சியைச் சேர்ந்த நிழல் பாதுகாப்பு அமைச்சர் ஜெரால்ட் ஹோவர்த்,லண்டன் மாநகர காவல்துறையின் ஆணையர் என்ன செய்கிறார் என்றும் கேள்வி எழுப்பினார்.

No comments:

Post a Comment