யாரும் யுத்தத்தை காரணம் காட்ட முடியாது, தேசத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒத்துழைக்க முன்வர வேண்டும்- ஜனாதிபதி
நேற்று படைவீரர்களை கௌரவிக்கும் விழாவில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார். பல லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட அந்த விழாவில் அவர் உரையாற்றுகையில்,
நான் மகிந்த சிந்தனையில் குறிப்பிட்டது போல் இந்நாட்டிலிருந்து யுத்தத்தை வேரோடு அழித்துள்ளேன். அடுத்ததாக தேசத்தை கட்டியெழுப்பும் திட்டத்திற்கமைய இனி யாரும் யுத்தத்தை காரணம் காட்டாது நாட்டிலுள்ள அனைத்து மக்களும் தேசத்தை கட்டியெழுப்ப ஒத்துழைக்க முன்வரவேண்டும் என குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கடந்த 30 வருடங்களாக பீடித்திருந்த கொடிய யுத்தத்தை முழுமையாக தோற்கடித்த பின் நடாத்தப்படும் முதலாவது தேசிய விழா இதுவாகும். புலிகள் தொடர்பாக மக்கள் பல்வேறு கருத்துக்களை சொன்னார்கள். புலிகளை ஒருபோதும் தோற்கடிக்கமுடியாது முன்னர் இருந்த தலைவர்களால் கூட புலிகளை தோற்கடிக்கமுடியாது போய்விட்டது. நாட்டை பிரித்து கொடுங்கள் என கூறினார்கள். ஆனால் நான் எனது படைதளபதிகளையும் இந்நாட்டிலுள்ள தாய்மாரின் புதல்வர்களையும் நம்பினேன். இந்நாடடிலுள்ள அனைவருக்கும் நாட்டுபற்று உள்ளது என்பதை நம்பினேன்.
தாய்மார்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிவிட்டு குண்டு வெடிக்கும் என்ற பயத்தில் பாடசாலை கதவருகில் நின்று காவல் காத்தார்த்கள். ஆனால் இனி அவ்வாறு எந்தக் குண்டும் வெடிக்காது என தாய்மார்களுக்கு கூறிவைக்கவிரும்புகின்றேன். ஒருகாலத்தில் வடபகுதியில் தேசியக்கொடியை பறக்கவிடுவதற்கு புலிகளின் அனுமதியை பெறவேண்டி இருந்தது. ஆனால் அந்த நிலை இனி இல்லை. எங்கும் ஒரே தேசியக்கொடிதான் பறக்கவிடப்படும். அனைத்து இன மக்களினது வீடுகளிலும் தேசியக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள அனைத்து மக்களும் இந்நாடு பூரண சுதந்திரம் அடைந்துவிட்டதாக கருதுகின்றார்கள் என குறிப்பிட்ட ஜனாதிபதி பயங்கரவாதத்தை வேரோடு அழித்ததுபோன்று சட்டவிரோத மதுபான உற்பத்தி, பேதைபொருள்பாவனையை ஒழித்தல் பேன்ற சவாலிலும் ஜெயிப்போம் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதமர் உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment