இனம் இனத்தை நாடும் பயங்காரவாதிகள் பயங்கரவாதிகளிடம் கற்றுக்கொள்வர்.
மணிப்பூர் விடுதலை இயக்கம் என்று சொல்லப் படும் இந்திய அரசாங்கத்தால் பயங்கரவாத இயக்கம் என்று பட்டியலிடப்பட்ட மக்கள் விடுதலை இராணுவம் (The People’s Liberation Army), தாம் புலிப் போராட்டத்தின் இலங்கைப் படிப்பனவுகளை கற்றுக் கொண்டதாக இந்திய ஊடகவியலாளர்களுக்குத் தெரிவித்துள்ளது.
'எமது இலக்கை அடைவதற்கு இராணுவ வலிமை மட்டும் போதுமானதல்ல. எமது இலக்கை அடைவதற்கு எமது போராட்டத்தை சர்வதேச மயப் படுத்த வேண்டும். நாம் முழு இந்திய மக்களின் ஆதரவைப் பெற முயற்சிக்க வேண்டும்.' என்று அவ்வியக்கத்தின் உபதலைவரான Manoharmayum Ngouba நேற்று தமது தலைமைப் பாசறையிலிருந்து கூறியுள்ளார். இந்த மக்கள் விடுதலை இராணுவத்தின் அரசியற் பிரிவுத் தலைமையகம் மணிப்பூர் மாயன்மார் எல்லiயில் உள்ளது என்று வாந வுநடநபசயிh பத்திரிகை கூறியுள்ளது.
மணிப்பூர் பிரச்சனையை அரசியல்ரீதியிற் தீர்ப்பது பற்றிய பேச்சுவார்த்தைகளின் போது மணிப்பூரின் தனித்துவத்தை ஏற்றுக் கொள்ளாவிடில் தாம் பேச்சுவார்த்தை மேசையில் இருக்கப் போவதில்லை என்று Manoharmayum Ngouba அதிலே கூறினார்.
மக்கள் விடுதலை இராணுவம் 1978 இல் மணிப்பூரின் இறைமைய மீட்டெடுப்பதற்கென்று சொல்ல்pத் தோற்றுவிக்கப்பட்டதாகும்.
0 comments :
Post a Comment