Monday, May 4, 2009

இலங்கையின் நிலையற்ற தன்மை, இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தும்: பிரதமர் மன்மோகன்சிங் பேச்சு

அரியானா மாநிலம் பெகோவாவில் பிரதமர் மன்மோகன்சிங் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அவர் பேசியதாவது:-தீவிரவாதத்தை ஒடுக்க காங்கிரசால்தான் உறுதியான நடவடிக்கை எடுக்க முடியும். மும்பை தாக்குதல் சம்பவத்தில் உறுதியான நடவடிக்கை எடுத்தோம். அதே சமயத்தில், தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரில், ஒரு குறிப்பிட்ட மதத்தினரை குறிவைத்து செயல்பட மாட்டோம். தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்து மாநிலங்களும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும்.

தற்போது, அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் ஆகியவற்றில் அமைதியின்மையும், நிலையற்ற தன்மையும் காணப்படுகின்றன. இவை இந்தியாவின் பாதுகாப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற சூழ்நிலையை காங்கிரசால் மட்டும்தான் திறமையாக கையாள முடியும். அதற்கான அனுபவம் எங்களுக்குத்தான் உள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று பா.ஜனதா கூறுவது பொய். இதுதொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று பேசினார்.

நன்றி தினத்தந்தி

No comments:

Post a Comment