Monday, May 4, 2009

போர்நிறுத்தத்துக்கு அழுத்தம் கொடுக்கவும்: பிரான்ஸ், பிரித்தானியாவிடம் புலிகள் கோரிக்கை


இலங்கையில் போர்நிறுத்தமொன்றை ஏற்படுத்த இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமென பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட் மற்றும் பேர்னாட் கவுச்னர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

“போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்கத் தயார்” என அந்தக் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கான பேச்சுவார்த்தையில் இணைந்துகொள்ள நாம் தயார்” எனவும் நடேசன் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் கவுச்னர் ஆகியோர் கடந்தவாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இலங்கை அரசாங்கத் தரப்பினரைச் சந்தித்து போர்நிறுத்தமொன்றுக்குச் செல்லுமாறு வலியுறுத்தியிருந்தனர். எனினும், அரசாங்கம் அவர்களின் கோரிக்கையை நிராகரித்திருந்தது.

இந்த நிலையிலேயே போர்நிறுத்தமொன்றை ஏற்படுத்துவதற்கான அழுத்தத்தை இலங்;கை அரசாங்கத்துக்கு வழங்கவேண்டுமென விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போர்நிறுத்தமொன்றை ஏற்படுத்தி மோதல் நடைபெறும் பகுதிக்கு மனிதநேயப் பணியாளர்களை அனுப்பும் விடயத்தில் பொது இணக்கப்பாடொன்றை ஏற்படுத்தும் முயற்சியில் தாம்; தோல்வியடைந்திருப்பதாக இலங்கை வந்திருந்து பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் கூறிச் சென்றிருந்தனர்.

அவர்கள் வந்து சென்று சில தினங்களில் இலங்கைக்கான ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் யசூசி அகாசி இலங்கை வந்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசியல் தலைவர்களைச் சந்தித்துடன், வவுனியா சென்று இடம்பெயர்ந்த மக்களையும் பார்வையிட்டிருந்தார்.
நன்றி ஐஎன்எல் லங்கா

No comments:

Post a Comment