Saturday, May 2, 2009

லசந்த விக்கரமதுங்கவின் கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்கின்றார் ஐ.நா பான் கீ மூன்.



கடந்த தை மாதம் இனம்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையில் மூத்த ஊடகவியலாளர்களின் ஒருவரான லசந்த விக்ரமதுங்கவின் கொலையாளிகளைக் கண்டுபிடித்து இலங்கை அரசு தண்டனை கொடுக்கவேண்டும் என ஐ.நா செயலாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலக ஊடக சுதந்திர தினத்திற்கான அறிக்கையில் அவர் மேற்காண்ட கோரிக்கையை விடுத்துள்ளார். மேலும் அவ்வறிக்கையில் இலங்கையில் தாக்குதலுக்கு உள்ளாகின்ற பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியளிப்பதாகவும் உயர்வாகவும் உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு 48 ஊடகவியலாளர்களும் 2009 ம் ஆண்டு ஆரம்பித்தில் இருந்து 11 பேர் கொல்லப்பட்டும் உள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா வின் யுனெஸ்கோ நிறுவனம் திரு. லசந்தவின் மறைவின் பின்னர் 2009 ஆண்டிற்கான சுநத்திர ஊடகவியலாளருக்கான விருது வழங்கியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com