ஏ-9 வீதியைத் திறக்க இராணுவத்தின் அனுமதி இல்லை: அமைச்சர்
யாழ்ப்பாணத்துக்கும் கண்டிக்கும் இடையிலான ஏ-9 வீதியைத் திறப்பதற்கு இராணுவத்தினரிடமிருந்து இன்னமும் அனுமதி கிடைக்கவில்லையென பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் டபிள்யூ.பீ.எக்கநாயக்க கூறினார்.
ஏ-9 வீதியின் புனரமைப்பு நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளபோதும் அதனைத் திறப்பதற்கான திகதி தொடர்பில் இராணுவத்தரப்பில் எந்தவிதமான இணக்கப்பாடும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லையென அவர் குறிப்பிட்டார்.
எனினும், யாழ் குடாநாட்டுக்கான பொருள்களை ஏற்றிச்செல்லும் லொறிகள் ஏ-9 வீதியூடாகச் செல்ல அனுமதிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அமைச்சர் தெரிவித்தார்.
“இவ்வாறு அனுப்பப்படும் லொறிகள் அநுராதபுரத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அடைக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணத்தில் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்படும்” என எக்கநாயக்க கூறினார்.
அதேநேரம் 86 கிலோ மீற்றர் நீளம்கொண்ட ஏ-32 வீதியின் 12 கிலோ மீற்றர் தூரம் புனரமைக்கப்பட்டுவிட்டதாகத் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும், அந்தப் பாதையைத் திறப்பதாயின் முழுமையான அறிக்கை கிடைக்கப்பட்ட பின்னரே தீர்மானிக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Thanks INL
0 comments :
Post a Comment