Sunday, May 10, 2009

528 சிவிலியன்கள் ஐ.சி.ஆர்.சி மூலம் புல்மோட்டை அழைத்து வருகை

முல்லைத்தீவில் புலிகளின் பிடியில் சிக்கியிருக்கும் 528 சிவிலியன்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் நேற்றுமுன்தினம் (09) புல் மோட்டைக்கு அழைத்து வந்துள்ளனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கொடியுடன் கூடிய, “எம். வி. க்ரீன் ஓசன்” எனும் பயணிகள் கப்பலே கடற்படையினரின் உதவியுடன் சிவிலியன்களை புல்மோட்டைக்கு பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளது.

புலிகளிடமிருந்து மேற்படி தப்பி வந்துள்ள 528 சிவிலியன்களுள் 174 பேர் நோயாளிகள். ஏனையோர் அவர்களுடைய உறவினர்களாவர். புலிகளின் தாக்குதலுக்கு இலக்கானோர், சுகயீனமடைந்தோர் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் உடனடியாக புல்மோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டதுடன் ஏனையோர் கடற்படையினரின் உதவியுடன் பதவிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

க்ரீன் ஓஸன் கப்பல் மூலம் கடந்த சனிக்கிழமை அழைத்து வரப்பட்டவர்களுள் 130 ஆண்களும் 189 பெண்களும் 109 சிறுவர்களும் 100 சிறுமிகளும் அடங்குவதாக நிலையம் தெரிவித்தது. இக் கப்பல் சனிக்கிழமை இரவு 07 மணியளவில் புல்மோட்டையை வந்தடைந்தது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் 31 வது தடவையாகவே கடந்த 09 ஆம் திகதி 528 சிவிலியன்களை புலிகளிடமிருந்து மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment