புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட வன்னிப் பிரதேசத்தில் பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், அங்கு அமைக்கப்படும் பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கான விடுதிகளை அமைப்பதற்காக ஒவ்வொரு நிலையத்திற்கும் 50 ஏக்கர் நிலப்பரப்பை அரசு ஒதுக்கியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் ஜெயந்த விக்ரமரெட்ணா தெரிவித்துள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில், மாங்குளம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் பொலிஸ் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட இருப்பதாகவும் அவற்றிற்கும் தலா 200 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment