Sunday, May 3, 2009

இந்திய இராணுவ வண்டித் தொடரணியைத் தாக்கிய 20 புலி ஆதரவாளர்கள் கைது.


பெரியார் திராவிடக்கழகம் , மக்கள் திராவிட முன்னேற்றக்கழகம் மற்றும் சில கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் இன்று காலை கோயம்பத்தூர், நிலாம்பூர் பிரதேசத்தில் சென்று கொண்டிருந்த 80 இராணுவ வண்டிகளை மறித்து அவ்வண்டிகளில் இலங்கை இராணுவத்திற்கு பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக கூறி தாக்குதல் நாடாத்தியுள்ளனர்.

இராணுவ வண்டி தொடரணியை தெருவுக்கு குறக்கே மரக்குற்றிகளைப் போட்டு மறித்த அவர்கள் சில வண்டிகளின் சாரதிகளை வெளியே இழுத்து தாக்கியதுடன் அவ்வண்டிகளில் இருந்த கூடாரங்கள் , மற்றும் இராணுவப் பயிற்சி உபகரணங்களைக் கீழே இழுத்து எறிந்து நாசப்படுத்தியதுடன் சில வண்டிகளின் கண்ணாடிகளை அடித்து உடைத்துள்தாகவும் பொலிஸா தெரிவிக்கின்றனர்.

இக்காட்சியை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த இந்திய தொலைக்காட்சி ஒன்றின் நிருபர் ஒருவர் அடித்துக் காயப்படுத்தப்பட்டுள்ளார்.
தாக்குதல் இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த மடுக்கரை முகாமைச் சேர்ந்த கேணல் அஜய் ஷர்மா , ஹைதராபாத் இராணுவ முகாமில் பயிற்சியை முடித்துக்கொண்டு பிறிதொரு தளம் நோக்கி சென்றுகொண்டிருந்த இராணுவத்தினரே அங்கு தாக்குதலுக்கு உள்ளானதாகவும் பொலிஸாரின் தலையீட்டை அடுத்து அவர்கள் தளம் விரைந்துள்ளதாகவும் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

பொலிஸார் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இதுவரை 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் புலிகளின் முன்னணிச் செய்பாட்டாளர்கள் எனவும் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment