Sunday, May 3, 2009

பன்றி காய்ச்சல் 18 நாடு களில் பரவியுள்ளது.

மெக்சிகோ நாட்டில் பரவிய பன்றிக் காய்ச்சல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. ஆரம்பத்தில் மெக்சிகோ, அமெரிக்கா, கண்டத்தில் மட்டுமே பரவியிருந்த இந்த நோய் தற்போது மெக்சிகோ, அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், இஸ்ரேல், கோஸ்டாரிகா, நெதர்லாந்து, சுவிட் சர்லாந்து, ஆஸ்திரியா, டென்மார்க், ஹாங்காங், தென்கொரியா, இத்தாலி, ஐரீஷ் குடியரசு ஆகிய 18 நாடுகளில் பரவியுள்ளது.

நோயை கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளன. எனவே மேலும் பல நாடுகளுக்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மெக்சிகோவில் பன்றி காய்ச்சலுக்கு 160 பேர் பலியாகி இருப்பதாக கூறப் பட்டது. ஆனால் 101 பேர் மட்டுமே பலியாகி இருப்ப தாக மெக்சிகோ அரசு கூறியுள்ளது. அமெரிக்கா வில் ஒருவர் உயிர் இழந்துள்ளார். மேலும் 72 நாடுகளில் பன்றி காய்ச்சல் பரவ வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறி இருக்கிறது.

இதற்காக உலக சுகாதார அமைப்பு 24 லட்சம் வைரஸ் தடுப்பு மருந்துகளை இந்த நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. பன்றிகள் மூலமே நோய் பரவுவதால் பல நாடுகளில் பன்றிகளை அழித்து வருகின்றனர். எகிப்து நாட்டில் மட்டுமே 3 லட்சம் பன்றிகள் அழிக்கப் பட்டுள்ளன.

Thanks Thinathanthi

No comments:

Post a Comment