இலங்கையிலே யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இங்கு அமுலில் உள்ள பயங்கரவாத மற்றும் அவசரகாலச் சட்டங்கள் படிப்படியாக நீக்கப்படவேண்டும் என வேண்டும் என ஐ.தே. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் அதற்கும் ஆதரவு வழங்கத் தாம் தயாரெனக் கிரியல்ல சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இலங்கைக்கு எதிராகவும், பாதுகாப்புப் படைகளுக்கு எதிராகவும் மோதல் குற்றச்சாட்டுக்களைக் கொண்டுவர சர்வதேசரீதியில் எடுக்கப்படும் நடவடிக்கைக்குத் தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கூறினார்.
பயங்கரவாதத்துக்கு எதிராக மோதல்களில் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஷ தலைமையிலான அரசாங்கம் வெற்றிபெற்றிருப்பதைப் பாராட்டிய ஜெயசேகர, விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்குக் கடந்த காலங்களில் பலர் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததாகவும் தெரிவித்தார்.
எனினும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்கள் முடிவடைந்துள்ளபோதும் பயங்கரவாதத் தடைச்சட்டமும், அவசரகாலச் சட்டமும் நீக்கப்படாது என சபை முதல்வர் அமைச்சர் நிமால் சிறிபால.டி.சில்வா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment