Friday, April 24, 2009

இலங்கை வந்துள்ள எம்.கே. நாராயணன், மேனன் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல். யுத்த நிறுத்தம் தொடர்பாக வாய்திறக்க மாட்டோம். -முகர்ஜி-

இலங்கையில் இடம்பெறுகின்ற யுத்தத்தில் மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுவது அதிருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ள இந்திய அரசு, அந்நாட்டின் பாதுகாப்பு ஆலோசர் எம்.கே. நாராயணன் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலர் சிவசங்கர் மேனர் ஆகியோரை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

இன்று காலை கொழும்பு வந்தடைந்த இந்தியப் பிரமுகர்கள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கவுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டள்ளதாக தெரியவருகின்றது. கலந்துரையாடல் தொடர்பாக ஊடகங்களுக்கு ஜனாதிபதி விளக்கமளிப்பார் என ஜனாதிபதி செயலகம் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும் தாம் யுத்த நிறுத்தம் ஒன்று தொடர்பாக இலங்கை அரசுடன் பேசப்பேவதில்லை என முகர்ஜி தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. unnalthanda inthalivu parathesi narayanaa

    ReplyDelete