வடக்கின் விடுதலையும் போர்க்குற்றவாளிகளின் கைதும் -புரட்சிதாசன் அகமட்-
சுமார் மூன்று தசாப்த காலமாக கொலைவெறியுடனும் இரத்தக் காட்டேரி தன்மையுடனும் தனது அராஜக நடவடிக்கைகளை மேற்கொண்ட பாசிச புலி இயக்கம் குற்றுயுறுடன் குறுகிய பிரதேசத்தில் கூனிக் குறுகி நிற்கின்றது. எத்தனையோ வட்ட மேசை மகாநாடுகள் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு ஈற்றில் அவைகளை உதாசீனம் செய்து தற்போது அவைகள் நாதியற்று செல்லாக் காசுபோல் ஆகிவிட்டது. ‘நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்’ எனும் வரட்டு கௌரவத்திலும் போலிவேடத்திலும் தனது இறுமாப்பினை வெளிப்படுத்தி முழு உலகத்தினையுமே படுமுட்டாளாக்க முயற்சி செய்த பாசிச புலிகளின் இயக்கத் தலைவர் தற்போது நிர்க்கதியான நிலையில் கதிகலங்கி நிற்கும் கேவலான நிலையை காணமுடிகின்றது.
அண்மையச் செய்தி ஒன்று கூறியது தலைவருக்கு மனநிலையும் புத்தி சுயாதீனமும் குழம்பிவிட்டது இதன் நிமித்தம் தனது சகல பொறுப்புக்களையும் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானிடம் கையளித்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறி விட்டதாகவும் கதை பலமாக அடிபட்டது. எது எப்படியிருப்பினும் வடக்கு கிழக்கிற்கான தானே தனியுரிமையையும் தளபதிவேடமும் பூண்ட இந்தப் புலித் தலைவன் தற்போது அந்தப் பிரதேசத்தில் ஒரு அடி நிலத்தில்கூட வாழ வக்கில்லாமல் தப்பிச்செல்ல எத்தனிக்கும் கீழ் தரமான நிலைக்கு தள்ளிவிடப் பட்டுள்ளார்.
‘அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்ற்றுக்கும்’ எனும் முதுமொழியின் பிரகாரம் சகல நடவடிக்கைகளும் நடைபெற்ற வன்னமிருக்கின்றது.
தமிழீழ கனவுக்காகவும் இந்த மாயைக்காகவும் எத்தளை இலச்சக் கணக்கில் மனித உயிர்களை பறிப்பதற்கு முன்னின்றுள்ளார் என்பதனை அறியும் போது உண்மையான சகோதர பாசமுள்ள இலங்கை மட்டும் சர்வதேச ரீதியான உதவிக்கரம் எவ்வாறு இந்தப் பாசிச புலிகளுக்கு கிட்டும் என்பதனை இவர்கள் அறியவில்லை பாவம்.
இலங்கையில் பொதுவாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வாழுகின்ற அப்பாவி தமிழ் முஸ்லீம் மக்கள் தற்போது அங்காடிகளாகவும், அடிமைகளாகவும் மிருகங்கள் போலவும் இருக்க இல்லறமின்றி தாகம் தீர்க்க பருகத் தண்ணீரின்றி பசியார உணவின்றி மர நிழல்களிலும் புட்தரைகளிலும் தங்களது அன்றாட ஜீபனோபாயத்தை கழித்துவருகின்றனர் இத்தனைக்கும் காரண கர்தாவாக இப்புலிப் பாசிசம் இருந்து ஈற்றில் மக்களை அநாதரவாக தவிக்க விட்டு தப்பிக்க முயற்சி செய்யும் சாமத்தியமற்ற இந்தத் புலித்தலைவன் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு செய்த மிகவும் பாரிய துரோகச் செயல் என்றே குறிப்பிட வேண்டும்.
தேசிய ரீதியாக செயற்பட்டும் ஈற்றில் சர்வதேச ரீதியாக செயற்பட்டும் எவ்வித பயனுமின்றி பலனுமின்றி வடக்கு கிழக்கு வெற்று பூமியாகி விட்டது. செல்வம் கொழிக்கும் சொர்க்க பூமியாக இருந்த இந்த பிரதேசம் தற்போது சுடு காடாகவும் பாலை வனங்களாகவும் மாறிவிட்டது. இன்னும் எத்தனை வருடங்கள் செல்லப் போகின்றது இது இன்னும் மீண்டும் பழைய நிலைக்கு மீள்வதற்கு என்று யாராலும் கூற முடியாத யதார்த்தமாகிவிட்டது.
தனித்துவத்துடனும் தலைநிமிர்ந்தும் வாழ்ந்த தமிழினம் தலைகுனிந்து முளம்தாழிட்டு முடங்கிப்போயுள்ளது. ஏன் இந்த கர்வமும் ஆணவமும் இந்த தலைமைக்கு வந்தது என்று கதிகலங்கி நடுத்தெருவில் வேதனையுடனும் வலியுடனும் வாழ்கின்ற தமிழ் முஸ்லீம் மக்கள் மூக்கில் விரலை வைத்து முனுமுனுக்கின்றனர்.
எத்தனை ஜீவன்கள் குற்றுயிருடனும் அங்கங்களை இழந்தும் மருத்துவ வசதியின்றியும் நாளாந்தம் மரிக்கின்றனர் பச்சிலம் பாலகர்கள் பாலின்றி பரிதாபகரமாக துடிதுடித்து இறக்கின்றனர். இத்தனையோ இளம் பெண்கள் விதவைகள் காமுகர்களின் காமப் பசிக்கு இரையாகுகின்றனர் இதற்கெல்லாம் காரணம் யார்? என்பதனை தற்போது புரிந்தும் பரியாதவர்களாகவும் தமிழினம் தடுமாறிக் கொண்டிருக்கின்றது.
ஒரு போராட்டம் என்பது அது எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் அதை எப்படி வெற்றிகரமாக நடைமுறைப் படுத்த வேண்டும் போன்ற போர் விடயங்களில் தேர்ச்சி பெற்ற விட்பனர்களின் அறிவுறைகள் போரியல் தந்திரங்கள் எல்லாம் இன்று தவுடுபொடியாகி விட்டது. ஆனால் இங்கு போராட்டம் எனும் பெயரில் திட்டமிட்ட கொலைக் களமாகவே தனது சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டதால் உலகில் எந்த நாடும் இந்த போராட்டத்திற்கு அங்கீகாரமும் ஆதரவும வழங்க முன்வரவில்லை.
உலக நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்களினால் முன்னெடுத்து செல்லப்படுகின்ற கவனயீர்ப்பு விழிப்புணர்ச்சி போராட்டங்கள் ஒன்றுமே அரங்கேரவில்லை. இதனை இங்கு வாழும் மேற்குலக நாட்டவர்கள் ஒரு தெரு கேலிக் கூத்தாகவே நோக்குகின்றனரே தவிர எதுவித உதவிக் கரங்களையும் வழங்க முன்வரவில்லை. இத்தனைக்கும காரணம் பாசிச புலிகள் இயக்கம் சர்வதேச மட்டத்தில் தடைசெய்யப்பட்ட ஒரு அங்கீகாரமற்ற பயங்கரவாத அமைப்பாகும் என்பதனை யாவரும் நன்கு அறிவர். வாழவேண்டிய எத்தனையோ உயிர்கள் அநியானமான முறையில் தங்களின் உயிர்களை இழந்து முகவரியற்றவர்களாக மாறிவிட்டனர். இந்த மண்ணுக்காக மல்யுத்தம் புரிந்து மண்ணிலேயே மடியும் இந்த விட்டில்கள் மீண்டும் உயிர்ப்பித்து வருமா?
வாழ்கையின் அர்த்தங்களையும் தத்துவங்களையும் புரியாத முட்டாள்களாகவும் அநாகரிகமான சிந்தனைகளிலும் தங்களை அர்ப்பணித்து மனிதர்களை கொலை களத்திற்கு இரையாக்கிவிட்டு இறுதியில் கையை விரிக்கும் இந்தக் கோழைத்துவ தலைமைத்துவம் இனியும் தமிழினத்துக்கு அவசியம்தானா?
மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை மனிதன் மீது மண்ணுக்கு ஆசை ஈற்றில் ஜெயிப்பது மண்தான் என்பதனை இந்த மானிட ஜென்மம் அறியவில்லையே மண்ணுக்காக போர் புரிந்து கடைசியில் மனிதர்களற்ற வெற்றுத் தரையை கைப்பற்றி இதனை வளங்கொழிக்கும் வகையில் முன்னேற்றுவதற்கு இன்னும் குறைந்தது இரண்டு தசாப்பதங்கள் சரி போகுமோ தெரியாது.
அண்மைய கணக்கெடுப்பின் பிரகாரம் இலங்கையில் வாழ்கின்ற ஒரு தலைக்கு சுமார் இரண்டு இலச்சங்கள் கடன் பழுவுடன் வாழ்வதாக சர்வதேச நாணய நிதியம் ஒரு கணக்கெடுப்பினை வெளியிட்டுள்ளது இதனை எவ்வாறு மீளமைத்துக் கொள்வது என்பது தின்டாட்ட நிலையில் இருக்கும் போது மேலும் இந்த வெற்றுப் பாலைவனப் பிரதேசங்களை சோலை வனங்களாகவும் செல்வம் கொழிக்கும் பிரதேசமாகவும் மாற்றுவதற்கு மேலும் எத்தனை இலட்சங்கள் கடன் பழுவாக தலைக்கு விழும் என்று எல்லோரும் அஞ்சிய வண்ணமிருக்கின்றனர்.
அர்த்தமற்ற யுத்தம் இன்னும் அந்தரத்தில் எம்மை ஆட வைக்கிறது. இத்தனைக்கும் காரணம் ஒரு தனிமனித புலியின் தலைக்கணமும் திட்டமிடப்படாத யுத்தமுமேயாகும். புலிகள் இவ்வாறு ஒரு கணமும் நினைத்திருக்க வில்லை தங்களுக்கு இவ்வாறான நிலை ஏற்படும் என்று இவ்வளவு காலமும் இலங்கையையும் சர்வதேசத்தையும் ஏமாற்றி முட்டாள்களாகவும் கோழைகளாகவும் நினைத்து தொடர்ந்து தங்களது அராஜக நடவடிக்கைகளையும் கொலைவெறி நாடகத்தையுமே நடாத்திவந்தனர் அதற்கு கிடைத்த பரிசுதான் தற்போதைய இந்த பாலைவனப் பூமிகள்.
மனிதர்கள் அற்ற வெற்றுநிலத்தினால் என்ன பயன் என்பதனை இரண்டு இனங்களும் சிந்திக்க தவறிவிட்டனர் இதற்கெல்லாம் காரணம் இரண்டு இனங்களுக்குள் ஒற்றுமையின்மை, போட்டி மன்ப்பான்மை, அகங்காரம், ஆணவம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையின்மை காழ்ப்புணர்ச்சி போன்றவையாகும்.
ஈற்றில் இருதரப்பாரும் செத்துமடிந்து வெறும் மண்னையே கைப்பற்றி அரசும் பறைசாற்றுகின்றது. இந்தக் கொடூர யுத்ததினால் இலங்கையின் பொருளாதாரம் அதாள பாதாளத்திற்கு சென்றுள்ளமையினை யாரும் அறியவில்லை மக்கள் யுத்தநிலையை விடவும வாழ்வாதார யுத்தம் படுமேசமாக தற்போது அரங்கேறியிருக்கின்றது என்பதனை நோக்கும் போது கவலையையும் வேதனையையும் அளிக்கின்றது தற்போது சகலரும் அங்கலாய்புடனும் எதிர்பார்த்திருப்பது எப்போது இந்த கொலை அரக்கன் கைதுசெய்யப்படுவான் என்பதனைதான் தேசியமும் சர்வதேசமும் கூட எதிர்பார்த் வன்னமிருக்கின்றது.
இதற்கான இறுதி பகீரதப்போர் தற்போது அகோரமாக நடைபெற்று முடியும் தருவாயில் இருக்கின்றது. இந்த கொலைக் களத்தின் பொறிக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கும் அப்பாவி தமிழ்மக்கள் தங்களது உயிர்களை தங்களது கைகளில் பிடித்தவண்ணம் தைரியமிழந்து மடிந்து கொண்டிருக்கின்றனர். சரணடைந்தால் சந்தி சிரிக்கும் சர்வதேசம் கேலிக் கூத்தாக கணக்கிடும் என்று அப்பாவி பொதுமக்களையும் பலியிடும் நோக்கத்துடன் தங்களது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் இது மிலேச்சதனமானதும் மிகவும் கண்டிக்க தக்கதுமாகும் என்று கூறுவது மிகையாகாது.
எனவே மேலும் உயிரிழப்பில் இருந்து விடுதலை பெறுவதற்காக எஞ்சியிருக்கும் மனித கேடயங்களை விடுவிக்க இந்த பாசிச புலிகள் முன்வருவார்களா? என்பதே இப்போதைய காலத்தின் தேவையாக இருக்கின்றது. எப்போது நிம்மதி பிறக்கும் விடியல் பிறக்கும் தலை நிமிர்ந்து சுதந்திரமாக வாழ முடியும் என்று தமிழினமும் காத்துக் கொண்டேயிருக்கிறது.
ஆக்கியோன்
புரட்சிதாசன் அகமட். VIII
0 comments :
Post a Comment