என்னை மன்னியுங்கள் யாவும் எனது கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளது. பொட்டு அம்மான்.
கடந்த 1ம் திகதி முதல் புதுக்குடியிருப்பு கிழக்கு பிரதேசத்தை படையினர் பல முனைகளாலும் சுற்றி வளைத்திருந்தனர். புலிகளின் இறுதி கட்டைளை மையமாக விளங்கிய அப்பிரதேசத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக புலிகளின் பல படையணிகள் தமது உயர் மட்ட தளபதிகளின் நேரடி வழிநடத்தலில் படையினருக்கு உக்கிர எதிர்ப்பைக் காட்டினர். நவீன ரக ஆயுதங்கள் மற்றும் 130 மி.மி ஆட்லறிகள் , 14.5 மி.மி விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் என்பன முன்னணி அரங்குகளுக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. போர் உக்கிரமடைந்தது.
புலிகள் முன்னரங்குகளில் கொண்டு வந்த நிறுத்திய ஆட்லறித் தளங்கள் படையினரால் இலகுவாக இனங்காணப்பட்டதுடன் அவை படையினரின் கனரக ஆயுதப்பிரிவினரால் நிர்மூலமாக்கப்பட்டதுடன் மூன்று ஆட்லறிகள் கைப்பற்றவும் பட்டன.
படையினரது தாக்குதல் வேகம் பன்மடங்காக்கப்பட்டது. 1.5 சதுர கிலோ மீற்றர் பரப்பளவினுள் சுற்றிவளைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரம் போராளிகள் நிலை குளம்பினர். நேற்று முன்தினம் சனிக்கிழமை பிற்பகல் வரை 200 மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டிருந்ததுடன் 150 மேற்பட்ட புலிகளின் சடலங்கள் கட்டம் கட்டமாக 53ம் , 58ம் 8 ம் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டிருந்தது.
நிலைமைகளை நன்றாக விளங்கியிருந்தும் இரணைப்பளைக்கு அப்பால் உள்ள மறைவிடம் ஒன்றிலிருந்து தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் கட்டளைகளை வழங்கி விசப்பரீட்சை நாடாத்திக் கொண்டிருந்த பொட்டு 400 க்கு மேற்பட்ட புலிகள் மடியும் வரை தொடர்ந்தும் அவர்களை போராடுமாறு வற்புறத்திக்கொண்டே இருந்திருக்கின்றார்.
பின்வாங்குவதை விட வேறு வழியில்லை என்பதை உணர்ந்த முன்னிலைத் தளபதிகள் அதற்கு தேவையான சூட்டாதரவையும் மேலும் படையணிகளின் உதவியையும் கேட்டுள்ளனர். அம்பலவாணன்பொக்கணைக்கு சற்று சமீபமான ஓர் பிரதேசத்தினூடாக வெளியேறுமாறு பொட்டுவிடம் இருந்து அனுமதி கிடைத்தள்ளது. புலிகளின் தொடர்பாடலை ஒட்டுக்கேட்ட படையணிகள் அங்கே தமது படைவலுவைக் கூட்டி ஆட்பலத்தையும் பெருக்கி தயார் நிலையில் இருந்துள்ளனர்.
பொட்டுவின் தகவலில் நம்பிக்கை கொண்ட புலிகளின் முன்னணித் தளபதிகள் முதலில் குறிப்பிட்ட அந்த வழியால் வெளியேற முற்படுகின்றனர். ஆனால் அவர்கள் அவ்விடத்தை அடையும் வரை பொட்டு எவ்வித தகவல்களும் இல்லாமல் மேற்படி பாதையை சிபார்சு செய்திருக்கின்றார் என்பதை உணர்ந்து கொள்வதற்கு முன்னர் அவர்களில் பலர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர். ஏனையோர் சிறிது சண்டையின் பின்னர் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதலிலேயே கேணல் தீபனும் கொல்லப்பட்டார்.
மேற்படி 4-5 நாள் உக்கிர மோதலில் 400 க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். வன்னி கட்டளைத் தளபதி தீபன் , மாலதி படையணித் தளபதி விதுஷா , சோதியா படையணித் தளபதி தூக்கா , பிரபாகரனின் முன்னாள் மெய்பாதுகாவலர் கடாபி , மட்டு மாவட்ட இராணுவத்தளபதி நாகேஷ் , முன்னணி தளபதிகள் ஒருவரான ரூபன் , தளபதி கமலினி , தளபதி பிரபா , ராதா படையணித் தளபதி சிலம்பரசன் , ராதா படையணி துணைத்தளபதி அன்பு , மோட்டார் தாக்குதல்களுக்கு பொறுப்பாளர்களாகச் செயற்பட்ட கோபால் மற்றும் மணிவண்ணன் , சோதியா படையிணியின் முக்கியஸ்தர் மோகனா , தளபதி அஸ்மி மற்றும் முன்னைநாள் மணலாறு பிரதேச தளபதி ஆதித்தியன் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் முற்றாக பொட்டுவின் கட்டளையின் கீழ் தீபன் மற்றும் பாணு ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டது. பாணு படுகாயமடைந்துள்ளார்.. ஆனால் பொட்டுவின் பல பொறுப்புணர்சி அற்ற செயல்களால் இப்பாரிய பேரழிவு ஏற்பட்டுள்ளது என்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாரிய அழிவைச் சந்தித்து விரக்தியடைந்த நிலையில் படையினரின் மேலுமோர் முற்றுகையில் சிக்கியிருச்கும் தளபதி ஒருவர் உதவிக்கு ஆட்களைக் கோரியபோது "என்னை மன்னித்து விடுக்கள் , யாவும் எனது கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளது" என தொலைத் தொடர்பு சாதனங்கள் ஊடாக பொட்டு கையை விரித்துள்ளதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment