Wednesday, April 29, 2009

சமாதானம் பற்றிய உண்மையை வெளிப்படுத்தும்படி நான்கு கட்சிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை.

யுத்தகளத்தில் கனரக ஆயுதங்கள் மற்றும் விமானத்தாக்குதகளை நிறுத்துவதாக ஆரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக நான்கு கட்சிகள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அக்கூட்டிறிக்கையில் புலிகளிக்கத்தோடு அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கும் சமாதானம் பற்றிய இரகசியத்தை வெளியிடும்படி கோரப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் ஐக்கியதேசியக் கட்சியின் செயலாளர் திசா அத்தனாயக்கா, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மகாஜனக் கன்னைத் தலைவர் மங்கள சமரவீரா, சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணித்தலைவர் மனோகணேசன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

அரசாங்கம் பாராளுமன்றத்தைக் கூட்டி அன்றேல் ஜனாதிபதி தன் அறிக்கைமூலம் தான் வெளியிட்டுள்ள "படைகள் எதிர்த்துப் போராடும்பொழுது கனரக ஆயுதங்களையும் விமானத்தாக்குதலையும் தவிர்க்கும்படி" கூறியாதாக வெளியிட்ட அறிக்கை பற்றித் தெளிவு படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

"எதிர்த்துப்போரிடும் நடவடிக்கைகள் ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கனரக ஆயுதங்களைப் பாவிப்பதையும் விமானப்படைத தாக்குதலையும் தவிர்க்கும்படி எமது பாதுகாப்புப் படையினருக்கு அறிவிக்கப் பட்டுள்ளது." என்று ஏப்ரல் 27 தேதி அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையைப் பற்றி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசாங்க செய்தித் திணைக்கள இணையத்தளம் இவ்வறிக்கையை சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை வரவேற்று இந்திய உள்விவகார அமைச்சர் பி.சிதம்பரம் அவர்களும் தமிழ் நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களும் "பகைமையை முடிவுக்கக் கொண்டு வருதல்" என்று இதைக் கூறியுள்ளனர். அவர்கள் கூறிய அக்கூற்றை சர்வதேச ஊடகங்கள் பெரிதாக வெளிப்படுத்திய பொழுது சிறிலங்கா அரசாங்கம் வேறும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் "சிறீலங்கா பாதுகாப்பப் படைகள் தமது மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகளைத் தொடரும் என்றும் எதிர்ப்பு நடவடிக்கைளை முடிவுக்குக் கொண்டவருதல் என்பதை சமதானம் செய்துவிட்டதாகப்" பிழையாக வியாக்கியானப்படுத்தப் படுகிறதென்றும் வெளியிட்டுள்ளது.

இப்படியான முரண்பாடான அறிக்கைகளால் இந்த நாட்டு மக்கள் குறிப்பாக வன்னியிலுள்ள இடம்பெயர்ந்த தமிழ்மக்களும் வெளிநாட்டு சமூகங்களும் இலங்கை அரசாங்கமா இந்திய அரசியல்வாதிகளா உண்மை கூறுகிறார்கள் என்று முடிவெடுக்க முடியாமல் உள்ளனர்.
இலங்கைப் பிரச்சனைகள் பற்றி அறிய அவாவுள்ளவர்கள் எது உண்மை என்பதை அறிய விரும்பகின்றனர் என்று அந்த அறிக்கை கூறுகின்றது.


..................

No comments:

Post a Comment