பாராளுமன்ற உறுப்பினர் பியசிறி விஜயநாயக்கவிற்கு பிடிவிறாந்து.
ஜேவிபியில் இருந்து பிரிந்து சென்ற விமல்வீரவன்சவின் கட்சியான தேசிய விடுதலை முன்னணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பியசிறி விஜயநாயக்க மற்றும் ஐவரைக் கைது செய்யுமாறு அத்தனகல மஜிஸ்திரேட் நீதிமன்றம் பிடிஆணை பிறப்பித்துள்ளது.
வெயங்கொடப் பிரதேசத்தில் அண்மையில் ஜேவிபி உறுப்பினர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பாகவே இவ் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் சம்பவ இடத்தில் காணப்பட்டதாக கண்கண்ட சாட்சிகள் நீதிமன்றில் தெரிவித்திருந்ததுடன் அவரது கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு அரச பரிசோதனைத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிந்ததும் குறிப்படத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment