ஐ.நா பிரதிநிதிகளை யுத்த சூனியப்பிரதேத்தினுள் அனுப்ப இலங்கை அரசு சம்மதித்துள்ளது.
வன்னியில் மக்கள் சிக்கியுள்ள யுத்த சூனியப் பிரதேசங்களுக்கு ஐ.நா பிரதிநிதிகள் செல்வதற்கு இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என ஐ.நா தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தது. இக்கோரிக்கையை ஏற்று கொழும்பில் நிலைகொண்டுள்ள ஐ.நா பிரதிநிதிகளை யுத்த சூனியப் பிரதேசத்தினுள் அனுமதிக்க இலங்கை அரசு சம்மதம் தெரிவித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஆனால் ஐ.நா குழுவில் யார் இடம்பெறுகின்றனர்? அவர்கள் எத்தனை நாட்கள் அங்கு தங்கியிருக்க திட்டமிட்டுள்ளனர்? என்ன செய்ய விரும்புகின்றனர்? போன்ற விடயங்களை ஐ.நா எமக்கு தெளிவாக தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு அப்பிரதேசங்களுள் செல்ல பூரண அனுமதி வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment