தயா மாஸ்ரர் மற்றும் ஜோர்ஜ் படையினரிடம் சரண்.
புலிகளின் முத்த உறுப்பினரும், ஊடக ஓருங்கிணைப்பாளருமான தயா மாஸ்ரர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மற்றும் ஜோர்ஜ் ஆகியோர் படையினரிடம் சரணடைந்துள்ளனர். புதுமாத்தளன் பகுதியில் இருந்து வெளியேறிய மக்களுடன் மக்களாக வெளியேறி வரும் புலிகளின் முக்கிய உறுப்பினர்களுடன் இவர்கள் இருவரும் இன்று நண்பகலுக்கு சற்று முன்னர் சரணடைந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.
இதில் ஜோர்ஜ் என அழைக்கப்படும் வேலுப்பிள்ளை குமாரு பஞ்சரத்தினம் என்பவர் பிரபாகரன் , தமிழ்ச்செலவன் ஆகியோரது மிகமுக்கிய சந்திப்புகளுக்கு மொழிபெயர்பாளராக செயற்பட்டவராகும் என்பதுடன் கடந்த கால பேச்சுவார்த்தைக் குழுவில் பல நாடுகளுக்கும் சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்: இவரிடம் இருந்து புலிகளின் பல முக்கிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் என நம்பப்படுகின்றது.
தயாமாஸ்ரர் கடந்த 15-07-2006 கொழும்பில் உள்ள அப்பலோ வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்பபோது அவருடைய சிகிச்சைக்கு அரசு அனுமதி வழங்கியதையிட்டு பல கட்சிகள் தமது அதிருப்தியை தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் இறங்கியிருந்தது.
தாயா மாஸ்ரர் அப்பலோ வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக 15.07.2006 அன்று வந்திறங்கிய போது
ஜோர்ஜ் தமிழ்ச்செல்வனுடன் பிரமுகர்களைச் சந்திக்கின்றபோது
0 comments :
Post a Comment