பாராளுமன்ற உறுப்பினர் விஜயநாயக்கவின் துப்பாக்கியை மீளப்பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு.
கடந்த 6ம் திகதி சுட்டுக்கொல்லப்பட்ட ஜே-வி-பி ஆதரவாளர் கொலை தொடர்பான வழக்கு இன்று அத்தனகல மஜித்திரேட் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையின் போது சாட்சியளித்த ஐவரில் மூவர் விமல் வீரவன்ச தலைமை தாங்குகின்ற NFF கட்சியின் பாரளுமன்ற உறுப்பினரான பியசிறி விஜயநாயக்க துப்பாக்கி பிரயோகம் செய்ததை தாம் கண்டதாக தெரிவித்துள்ளனர்.
சாட்சிகளை செவிமடுத்த நீதிபதி பாரளுமன்ற உறுப்பினரது கைத்துப்பாக்கி மற்றும் சகல தடயங்களையும் அரச பரிசோதனைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டு வழக்கை எதிர்வரும் 29ம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
0 comments :
Post a Comment