மக்களை மீட்கும் பணியில் விசேட கடற்படைப் பிரிவினர் அமர்த்தப்பட்டுள்ளனர். கடற்படைப்பேச்சாளர்.
இன்று புலிகளின் பிடியில் இருந்து மக்கள் பல் வேறு முனைகளால் வெளியேறி வருகின்ற நிலையில் கடல் மார்க்கமாக வெளியேறுகின்ற மக்களை மீட்பதற்காக கடற்படையின் விசேட அணியொன்று அவசர சேவையில் அமர்த்தப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கப்ரன் டி.பி.எஸ். தஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று காலை புதுமாத்தளன் பகுதியில் இருந்து பல சிறிய வள்ளங்கள் வெளியேறுவதை புலிகளின் படகுகள் தடுக்க முனைவதை அவதானித்த கடற்படையினர் உடனடியாக அங்கு விரைந்து புலிகளின் படகுகளை அப்புறபடுத்தினர். இதுவரை கடற்படையினர் பருத்திதுறையை நோக்கி 80 படகுகளுக்கும் புதுமாத்தளனை நோக்கி 12 படகுகளுக்கும் வழித்துணை வழங்கியுள்ளனர். அதன்போது 1500 க்கு மேற்பட்ட மக்கள் மீட்க்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment