Friday, April 17, 2009

ஊடகச்செய்தி



17.04.2009

எமது தலைவர் உயர் திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்கள், தனது செயலாளர் திரு. இரா. சங்கையா அவர்களுடன் இம்மாத தொடக்கத்தில் மன்னார் வவுனியா மாவட்டங்களுக்கு விஜயத்தினை மேற்கொண்டு, கிளிநொச்சி முல்லைத்தீவு பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்து மன்னார், வவுனியா பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரிநிலையங்களில் ஏக்கத்துடன் வாழும் எமது உறவுகளின் உண்மையான நிலைமைகளையும், மன்னார் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைபெறுபவர்களையும், போரினால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் நேரடியாக பார்வையிட்டு ஜனாதிபதியின் கவனத்திற்கு எடுத்துச்சென்றுள்ளார்.


அதனைத்தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் இன்று (17.04.2009) தொடக்கம் 23.04.2009 வரை ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள எமது கட்சியின் பணிமனையில் தங்கியிருந்து யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் உறவினர்களை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், அத்துடன் யாழ் மாவட்ட பொதுமக்கள் மற்றும் யாழ்நகர வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் கலந்துரையாடவுள்ளார்.

தி. சுரேஷ்,
ஊடகச் செயலாளர்,

தமிழர் விடுதலைக் கூட்டணி,
தலைமைச்செயலகம் - கொழும்பு

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com