புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வழங்கிய காலக்கெடு முடிவடைந்துள்ளது. படை நடவடிக்கை தொடரும்.
நேற்று படையினரின் நன்கு திட்டமிட்ட நடவடிக்கை ஒன்றின்போது 35000 இற்கு மேற்பட்ட மக்கள் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து, பிரபாகரன் எஞ்சியுள்ள போராளிகளுடன் சரணடைவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இன்றுடன் அந்த அவகாசம் முடிந்துள்ள நிலையில் பிரபாகரன் தரப்பில் இருந்து அவ் அறிவித்தல் தொடர்பாக எவ்வித சாதகமான பதில்களும் கிடைக்கவில்லை என அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று தமது மக்களை மீட்டு எஞ்சியுள்ள புலிகளையும் பிரபாகரனையும் கையாளுகின்ற படைநடவடிக்கை தொடவிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment