Thursday, April 16, 2009

குருநகர் மீன் சந்தை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.



கடந்த 20 வருடங்களாக மூடி வைக்கப்பட்டிருந்த குருநகர் மீன் சந்தை நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாக விளங்கிய மேற்படி சந்தை, மீன் பிடி அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவின் போது மீன்பிடித் துறை அமைச்சின் பிரதி இயக்குனர் என். தர்மலிங்கம், யாழ் பாதுகாப்புப்படை அதிகாரிகள், பிரதேச மக்கள், மீனவர்கள், வியாபாரிகள் என பெருந்தொகையானோர் கலந்திருந்தனர்.

மீன்பிடி அமைச்சின் பூரண அனுசரணையுடன் திறந்து வைக்கப்பட்டுள்ள மேற்படி சந்தைத் தொகுதியை கடந்த 15 வருடங்களாக படையினரே பாவித்து வந்தனர். இவ்வாறு யாழ் நிலைமைகள் வழமைக்கு திரும்பும் போது அங்கு படையினரின் பாவனையில் உள்ள ஏனைய கட்டிடங்களும் மக்களது பாவனைக்கு விடப்படும் என அங்கு பேசிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment