Saturday, April 11, 2009

புலிகளின் ஊடுருவலைக் கண்காணிக்க விசேட செய்மதி.



வன்னியில் தோல்வியை தழுவியுள்ள புலித்தலைமை அதன் போராளிகளை இந்தியா நோக்கி நகர்த்த முற்படுவர் என எதிர்பார்க்கும் இந்திய புலனாய்வுத்துறை அவற்றை கண்காணிப்பதற்காக எதிர்வரும் ஏப்ரல் 20 திகதி முதல் விசேட செய்மதி அன்ரனா ஒன்றை பொருத்தவுள்ளது. இச்செய்மதியினூடாக இந்திய எல்லையை கடக்கின்ற சகலவிதமான பெரியகப்பல் முதல் சிறிய வள்ளம் வரை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ் அவதானிப்பானது புலிகளது ஊடுருவலை அவதானிப்பதுடன் மட்டுமல்லாது இந்தியாவிற்கு அச்சுறுத்தலான ஏனைய பயங்கரவாத அமைப்புக்கள் கடல்மார்க்க நுழைவதை கட்டுப்படுத்த முடியும் என இந்திய பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment