Sunday, April 12, 2009

நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. பிரான்ஸ், சுவிஸ் நாடுகளில் அசம்பாவிதங்கள்.



புலிகளின் ஆதரவாளர்களால் நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. புலிகளின் ஆதரவாளர்கள் கற்களாலும் போத்தல்களாலும் தூதரகம் மீது மேற்கொண்ட தாக்குதலில் அதன் கட்டிடத்திற்கு சேதம் ஏற்பட்டுள்தாகவும் ஊழியர்கள் எவருக்கும் எந்த சேதமும் இல்லை எனவும் அறிவித்துள்ளது.

புலிகள் தோல்வியை தழுவியுள்ள நிலையில் மக்களின் பெயரால் அகிம்சை போராட்டங்கள் எனும் பெயரில் புலிகளை தப்புவிக்க முயன்ற புலிகள் தற்போது தமது காட்டு மிராண்டித்தனத்தை புலம் பெயர் நாடுகளிலும் காட்டத் தொடங்கியுள்ளனர். நேற்றும் இன்றும் சுவிஸ், பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள ஒரு சில பெரும்பாண்மையின மக்கள் புலி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இவை தனிப்பட்ட விரோதம் காரணமாக இடம்பெற்ற தாக்குதல்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment