Sunday, April 19, 2009

இலங்கை விவகாரத்தை ஐ.நா விற்கு எடுத்துச் செல்லும் பிரித்தானியா.



இலங்கையின் வடக்கே அரச படைகளுக்கும் தமிழ்ப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்று வரும் யத்தம் தொடர்பாக தாம் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக தெரிவித்திருக்கும் பிரித்தானியா இவ்விடயம் தொடர்பாக ஐ.நா வுடன் அவசர பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்துவதற்கு தனது பிரதிநிதியை அனுப்பி வைத்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டேவிட் மிலிபான்ட், இலங்கையின் வடக்கே இடம்பெறுகின்ற யுத்தம் அப்பிரதேசத்தில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்களின் உயிருக்கு அச்சுறத்தலாக உள்ளது. எனவே அம்மக்கள் அப்பிரதேசத்தில் இருந்து வெளியேறும் பொருட்டு உடனடி யுத்த நிறுத்தம் அவசியமானதாகும். இது தொடர்பாக ஐ.நா இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்ற அதே நேரத்தில் மக்களை புலிகள் விடுவிப்பதற்கான உத்தரவாதத்தை புலிகளிடம் பெற்றுக்கொள்வதற்கும் முயற்சித்து வருகின்றது என கூறியுள்ளார்.

இந்நிலையில் பிரித்தானிய பிரதம மந்திரியின் விசேட தூதுவர் டெஸ் பிரவுண் அவரசரமாக ஐ.நா வை சந்திக்கும் பொருட்டு அமெரிக்கா புறப்பட்டுள்ளார்.

ஆயிரக்கணக்கான மக்களை புலிகள் தமது மனித கேடயங்களாக தடுத்து வைத்துள்ளதாகவும் இறுதி யுத்தத்தின்போது மக்களை காப்பாற்றும் விடயத்தில் அரச படைகள் அவதானமாக செயல்பட வேண்டும் எனவும் ஐ.நா தெரிவித்துள்ளது.

அதே நேரம் ஐ.நா வினால் விடுக்கப்பட்டுள்ள மோதல் தவிர்ப்பு நீடிப்பு தொடர்பான கோரிக்கை இலங்கை அரசினால் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது. இந் நிராகரிப்பை இலங்கை பாதுகாப்பமைச்சின் செயலர் ஐ.நா அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி இருந்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com