Tuesday, April 14, 2009

நிரந்தர யுத்த நிறுத்தம் ஒன்றிற்கு புலிகள் தயாராக உள்ளனராம்.

ஏதாவது ஒரு நாட்டின் மேற்பார்வையில் நிரந்தர யத்த நிறுத்தம் ஒன்றிற்கு தாம் தயாராக இருப்பதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். யுத்த நிறுத்த காலத்தின்போது இலங்கையில் யுத்திற்கு முடிவுகட்டு முகமாக அரசியல் தீர்வொன்றிற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான தளமாக யுத்த நிறுத்தம் அமையவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் கடந்தகால கெட்ட அனுபவங்களை அடிப்படையாக கொண்டு எதிர்வரும் காலங்களில் எந்தவொரு மத்தியஸ்தத்தையும் தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என அரசு திடமாக அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் மத்தியஸ்தம் என நாட்டினுள் புகுந்த நாடுகள் மத்தியஸ்தம் வகிப்பதற்கு மாறாக புலிகளின் இராணுவ ரீதியான வளர்ச்சிக்கு உதவியதே வரலாறாகும்.

அத்துடன் யுத்த நிறுத்தம் ஒன்றினூடாக புலிகள் தம்மை தாயார் படுத்திக்கொள்ள வாய்பளிக்கப்போவதில்லை என படைத்தரப்பினர் தெரிவிதுள்ளனர். மேலும் அண்மையில் பாதுகாப்பமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச விடுத்துள்ள அறிக்கையில், எவ்விதமான சர்வதேச மற்றும் உள்நாட்டு அழுத்தங்கள் யுத்தத்தை நிறுத்தப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment