Saturday, April 25, 2009

கடற்புலிகளின் தளம் வெறுமையாகவுள்ளது.



யுத்தத்தில் படுதோல்வியைத் தழுவி, நிலைகுலைந்து, ஓடுவதற்கும், ஒளிப்பதற்கும் புலிகள் இடம் தேடிவருகின்றனர். இந்நிலையில் புலிகளின் வளர்ச்சியிலும் வெற்றிகளிலும் பல வழியிலும் பங்கெடுத்து வந்த கடற்புலித்தளம் தற்போது வெறுமையாகக் காணப்படுவதாக புதுமாத்தளன் செய்திகள் தெரிவிக்கின்றன.

புதுமாத்தளன் கடற்புலிகளின் பிரதான தளத்தில் காணப்பட்ட படகுகள் யாவும் அப்பிரதேசத்தில் இருந்து வெளியேற விரும்பிய பொதுமக்களாலும் புலி உறுப்பினர்களாலும் பலவந்தமாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த நான்கு நாட்களில் வெளியேறிய மக்கள் ஏறக்குறைய 400 படகுகளுடன் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளை அடைந்துள்ளனர்.

இறுதியாக புதுமாத்தளன் பகுதியில் தளம் அமைத்திருந்த கடற்புலிகள் கடலிலும் தரையிலும் உள்ள படையினர் மீது பல வகைப்பட்ட யுத்திகளை பாவித்து தாக்குதல்களை நாடாத்த முற்பட்டிருந்தனர். ஆனால் அவை அனைத்தும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com