Thursday, April 2, 2009

உடையார்கட்டில் இரசாயனக் குதம் கண்டுபிடிப்பு.



கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் படையினரின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்ட உடையார்கட்டுப் பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல்களின் போது உடையார் கட்டுக்குளம் ஆற்றுக்கு அருகாமையில் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்டிருந்த 3500 கிலோ கிராம் பொட்டாசியம் குளோறைட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ் இரசாயனப் பொருள் கொண்டு புலிகள் சர்வதேச நிபுணர்களின் உதவியுடன் சி4 ரக வெடிபொருளையும் ஏனைய வெடிகுண்டுகளையும் தயாரித்து வந்ததாக படைத்தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

அடர்ந்த வனாந்தரப்பகுதியினுள் குளாய் கிணறுகள் அமைத்து அவற்றினுள் எரிபொருள் நிரப்பிய பரல்களை இறக்கி அதனுள் மேற்படி இரசாயன பொருட்களை மிகவும் சாதுரியமாக மறைத்து வைக்கப்பட்டுள்ளது. 70 பொலித்தீன் பைகளில் மிகவும் பாதுகாப்பாக அடைத்து அவை எரிபொருள் ராங்கிகளுள் இறக்கப்பட்டுள்ளதுடன் அவ்விடத்தில் புறநிலை வெப்பம் தாக்காதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இப்பிரதேசத்தில் படையினர் தொடர்ந்தும் தேடுதலில் ஈடுபட்டு வருவதாகவும் புலிகளின் தயாரிப்பான பலவகையான வெடிகுண்டுகளை அவர்கள் மீட்டுள்ளாதாகவும் படைத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.




No comments:

Post a Comment