இன்று காலை புலிகளின் டபிள் கப் ஒன்று படையினரின் தாக்குதலுக்கு இலக்காகியது. மக்கள் தொடர்ந்தும் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு வந்த வண்ணம்.
ஆளில்லா உளவு விமானங்கள் வன்னியில் இருந்து வெளியேறத் துடிக்கின்ற மக்களின் நடமாட்டத்தை படம்பிடித்து கட்டளைத் தலைமையகத்திற்கு அனுப்பிய வண்ணம் உள்ளது. இன்று காலை யுத்த சூனியப்பிரதேசங்களில் இருந்து வெளியேற முற்படும் மக்களை தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த புலிகளின் டபிள் கப் வாகனம் ஒன்றை இனம் கண்ட கொமாண்டோ படையணியினர் அவ்வாகனத்தை தாக்கி அழித்துள்ளதாக பாதுகாப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மிகவும் துணிகரமாக ஊடுருவிய கொமாண்டோ அணியினர் சிறியரக ஆயுதங்கள் கொண்டு மேற்கொண்ட தாக்குதலில் நான்கு புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக அவ்விடத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் வந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment