Thursday, April 9, 2009

எங்களுக்கும் வ(லி)ழியிருக்கு.! -கிழக்கான் ஆதம்-


(வன்னியில் சிக்கியிருக்கும் ஒரு மானிட அவலையின் குரல் இது)


வெட்ட வெளிகளிலும்

சேரு சகதியிலும்

சுட்டெரிக்கும் வெயிலிலும்

சுருங்கிய வயிறுகளாய்

சிதறிய சொந்தங்களாய்

சின்னா பின்னமான

சிவப்பான

எங்கள் மண்னுடன் நாங்களும்.


உலகை காக்க ஐ.நா யிருக்கு

உயிர்களை காக்க உறவுகலிருக்கு

மரங்களையும் அந்த-

மிருகங்களையும் காக்கக்கூட

மானிட அமைப்புக்கலிருக்கு

எங்களை காக்க யாரிருக்கா?


புலத்தில் உறவுகளுக்குள் சண்டை

தளத்தில் உணர்வுகளால் சண்டை

விட்டுவிடாமல்

நாங்கள் பொத்தி பொத்தி

பிடித்துக் கொண்டிருக்கிறோம்

எங்கள் உயிர்களை மட்டும்.


அண்ணன் வருவான் அழைத்துச் செல்ல

அக்கா வருவாள் வாரியணைக்க

சித்தப்பன் வருவான் சிறகுடன் மீட்க

காத்திருக்கும் எங்கள்

பிஞ்சுகளுக்கு

தினம் வந்து மீட்பவர் எங்கள்

எம தர்மராஜர் மட்டும்தான்.


உண்ண உணவு வேண்டாம்

உடுக்க உடையும் வேண்டாம்

உரிமையும், உடமையும்

வேண்டாம்

எங்கள் உயிர்களும் எங்களுக்கு

வேண்டாம்

எங்கள் எச்சங்களை யாயினும்

கொஞ்சம் தப்பிக்க விடுங்களேன்.


புலிகளை நாங்கள்

சிறை செய்யவில்லை

சிதறடிக்கின்றனர் உயிருடன்.


அரசையும் நாங்கள்

அவமதிக்க வில்லை

மன்டியிடுகிறோம்

உயிர் பிழைப்பதற்காய்


புலம் பெயர் உறவுகள்

எங்கள் நிலை புரிந்தும்

செயற்படவில்லை மீட்சிக்காய்!


புழுதியில் துவண்டு

குருதியில் நனைந்து

குற்ருயிராய் எங்கள் சனங்கள்.


நீங்கள் விடுவிக்கவும் வேண்டாம்

நாங்கள் விடுதலை பெறவும் வேண்டாம்

எங்கள் விதியை சொல்லியழுது

எங்களுக்கு நாங்கள்

நாளை விடுவித்துக் கொள்ள

ஆழ விரிந்த ஆழகான கடலிருக்கு

எங்களுடன் அருகில் உடனிருக்கு


எங்களுக்கும் வ(லி)ழியிருக்கு...

VII

No comments:

Post a Comment