யுத்த சூனியப் பிரதேசத்திற்கு அரசினால் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைப்பு - புலிகள் மக்கள் மீது ஆட்லறி தாக்குதல்.
புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் பகுதியில் அரசு பிரகடனப்படுத்தியுள்ள யுத்த சூன்யப் பிரதேசத்தில் தங்கியுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உணவு,மற்றும் அத்தியாவசியப் பொருட்களை இலங்கை அரசாங்கம் அவசர அவசரமாக அனுப்பி வைத்துள்ளது.
இதன் முதல் கட்டமாக நேற்று மாலை (19) 1200 தொன் உணவு, மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இவை அனைத்தும் செஞ்சிலுவைச் சங்கப் பிரதிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இது இவ்வாறிருக்க இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள பொக்கொன பிரதேசத்தை நோக்கி தமிழீழ விடுதலைப் புலிகள் பீரங்கித் தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிய வருகிறது. இந்தப் பீரங்கித் தாக்குதல் காரணமாக ஒன்பது சிவிலியன்கள் கொல்லப்பட்டதுடன் 15 பேர் காயமடைந்தனர்.
இதனையடுத்து இந்தப் பிரதேசத்திலிருந்து மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment