புலிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட யுத்த ராங்கி களமுனைக்கு திருப்பியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் புலிகளிடம் இருந்து பறித்தெடுக்கப்பட்ட ரி55 ரக பிரதான யுத்த டாங்கி சிறிய திருத்த வேலைகளின் பின்னர் களமுனைக்கு திரும்பியுள்ளது. விமானப்படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி தடம்புரண்டு மணலினுள் புதைந்திருந்த மேற்படி டாங்கி புதுமாத்தளன் மேற்குப் பகுதியில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டிருந்தது. மேற்படி யுத்த டாங்கியில் பிரதானமாக 100 மிமி கலிபர் துப்பாக்கியும் 12.7 மிமி விமான எதிர்ப்பு துப்பாக்கியும் பொருத்தப்பட்டிருந்துள்ளது.
இவ்யுத்த ராங்கியை கைப்பற்றிய 5ம் படையணியின் கட்டளைத் தளபதி லெப் கேணல். நிகால் சமரகோண் தெரிவிக்கையில், நாம் புதுக்குடியிருப்பின் கிழக்கு பகுதியை சுற்றி வளைத்து தாக்குதல் தொடுத்தோம், புலிகள் முற்றுகையை உடைத்து வெளியேறுவதற்கு மிகவும் கஸ்டப்பட்டார்கள். நாம் அவர்களுக்கு திரும்புவதற்குக்கூட இடம் கொடுக்கவில்லை. எமது யுத்த டாங்களின் சத்தங்களில் புலிகள் பங்கர்களை விட்டு விட்டு ஓடினார்கள் என்று தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment