Sunday, April 5, 2009

பிரபாகரனது மின்தூக்கி வசதியுடனான நிலக்கீழ் பங்கர் கண்டுபிடிப்பு.



மேஜர் ஜெனரல் ஜகத்டயஸ் தலைமையிலான 57ம் படையணியின் கீழ் செயற்படும் 12வது சிங்கப்படையணியினரால் புலிகளின் தலைவரால் அண்மையில் பாவிக்கப்பட்டுவந்த நிலக்கீழ் பங்கர் தொகுதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசுவமடு அடர்ந்த காட்டுப்பகுதியில் மேற்கொண்ட தேடுதலின்போது கண்டுபிடிக்கப்பட்ட மேற்படி பங்கர் தொகுதியில் பிரபாகரன் தங்கியிருந்தமைக்கான பல தடயங்கள் காணப்படுகின்றன.

மேற்படி பங்கர் தொகுதி ஆட்லறி மற்றும் விமானத் தாக்குதல்களுக்கு முகம்கொடுக்கக் கூடியவிதத்தில் அமைக்கப்பட்டிருந்ததுடன் நிலக்கீழ் பகுதியில் இருந்து மேலே வருவதற்கு மின்தூக்கி ஒன்று பொருத்தப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது. படையினர் முதல் தடவையாக மின்தூக்கி பொருத்தப்பட்ட பங்கர் தொகுதி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்படி பங்கர் தொகுதிக்கு அவசியமான மின்சாரத்தை வழங்கிய சத்தம் வெளிவராத அதிநவீன ஜெனரேற்றர் ஒன்றும் படையினரால் கைப்ற்றப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment