இலங்கை வந்துள்ள சர்வதேச பிரதிநிதிகள் வவுனியா இடைத்தங்கல் முகாம்களுக்குச் செல்கின்றனர்.
இலங்கையில் இடம்பெறுகின்ற உள்நாட்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிவிலியன்களின் நிலைமைகள் தொடர்பாக ஆராய வந்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் செயலர் டேவிட் மிலிபாண்ட் மற்றும் பிரான்ஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் ஹொக்னர் ஆகியோருக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சில் வைத்து அம்மக்களின் நிலைமைக் தொடர்பாக விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
இன்று நண்பகல் பத்திரிகையாளர்களுடன் தமது கருத்துக்களைத் தெரிவித்துள்ள அவர்கள் இடைத்தங்கல் முகாம்களுக்குச் சென்று வன்னியில் இருந்து தப்பி வந்துள்ள மக்களை நேரடியாக பார்வையிடவுள்ளதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment