இலங்கை மாணவர்கள் சிங்கப்பூரில் ஏமாற்றப்படுகின்றனர். சிங்கப்பூருக்கான இலங்கைத் தூதுவர்.
இலங்கையில் இருந்து சிங்கப்பூருக்கு கல்வி கற்பதற்கென கொண்டுவரப்பட்டுள்ள மாணவர்கள் அங்கு ஆசைகாட்டி ஏமாற்றப்பட்டுள்ளதாக தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சிங்கப்பூருக்கான இலங்கைத் தூதுவர் ஜயத்திறி சமரக்கோண் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள பத்திரிகைகளுடாக இலகுவாக விளம்பரம் செய்யப்படும் போது ஏராளமான மாணவர்கள் போலி ஏஜன்டுகளை நாடுகின்றனர். அவ்வாறு இவர்களது வலையில் சிக்கும் மாணவர்கள் இலகுவாக சிங்கப்பூரினுள் கொண்டு வரப்படுகின்றனர். சிங்கப்பூரினுள் இலங்கைப் பிரஜைகள் வர வீசா தேவையில்லை என்ற சட்டத்தைப் பயன்படுத்தி சிங்கப்பூரினுள் கொண்டு வரப்படும் மாணவர்கள் முதலில் ஆங்கில கற்கை நெறிகளுக்காக அனுப்பபடுவதுடன் அதே நேரத்தில் பகுதி நேர வேலைகளுக்கும் அமர்த்தப்படுகின்றனர்.
சிங்கப்பூரில் வேலை செய்வதானல் அனுமதி வேண்டும். ஆனால் எவ்வித அனுமதியுமில்லாமல் வேலைக்கமர்த்தப்பட்ட பல மாணவர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனவே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகவும் அவதானமாக இருப்பதுடன் அவ்வாறு ஆர்வம் உள்ளவர்கள் சிங்கப்பூரில் உள்ள இலங்கைத் தூதரகத்தை அன்றில் சம்பந்தப்பட்ட கல்லூரியை நேரடியாக தொடர்பு கொள்வது சிறந்தாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment