பிரபாகரன் தற்கொலை செய்துகொள்ள மாட்டார். அவர் வெள்ளாமுள்ளிவாய்கால் பகுதியில் இருக்கின்றார். -ஜோர்ஜ்-
படையினரிடம் நேற்று (22) சரணடைந்துள்ள புலிகளின் இரு முக்கியஸ்தர்களான புலிகளின் மூத்த உறுப்பினரும் ஊடக ஓருங்கிணைப்பாளருமான தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி, புலிகளின் முக்கிய ஆவணக்காப்பாளரும் மொழிபெயர்பாளருமான ஜோர்ஜ் என அழைக்கப்படும் வேலுப்பிள்ளை குமாரு பஞ்சரத்தினம் ஆகியோர் பல முக்கிய தகவல்களை இராணுவத்திருக்கு வழங்கி வருவதாக தெரியவருகின்றது.
சரணடைந்துள்ள அவர்கள் தாம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளாராக விளங்கிய தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்ட ஓரிரு நாட்களிலேயே புலிகள் இயக்கத்தினரால் ஒதுக்கப்பட்டதாவும் அவ்வியக்கத்திற்கும் தமக்குமான தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டிருந்தாகவும் தெரிவித்துள்ளதுடன் அவ்வியக்கத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட நிலையில் தாம் வன்னியில் சாதாரண வாழ்கை வாழ்ந்து வந்தகாகவும் இடம்பெயரும் மக்களுடன் மக்களாக இடம்பெயர்ந்து வன்னியில் பல துயரங்களுக்கு முகம் கொடுத்து யுத்த சூனியப் பிரதேசத்திலுள்ள கூடாரங்களில் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
தாம் யுத்த சூனியப் பிரதேசங்களில் இருந்தபோது புலிகள் மக்களுக்கு கொடுத்த துயரங்களை தாமும் அனுபவித்ததாக கூறும் அவர்கள் பிரபாகரனும் எஞ்சியுள்ள முன்னணித் தலைவர்கள் அனைவரும் யுத்த சூனியப் பிரதேசத்திற்குள் அடங்கும் வெள்ளாமுள்ளிவாய்க்கால் பகுதியிலேயே உள்ளனரெனவும் தெரிவித்துள்ளனர்.
பிரபாகரன் எந்த ஒரு காலகட்டத்திலும் சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொள்ளமாட்டார் எனவும் அவர் வாழ்வதற்கு மிகவும் ஆசைகொண்ட மனிதன் எனவும் ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.
புதுமாத்தளன் பகுதியில் சிக்கியிருந்த மக்கள் அனைவருமே புலிகளின் கட்டுப்பாட்டை உடைத்து வெளியேறுவதற்கு மிகுந்த விருப்பத்துடன் காணப்பட்டனர். ஆனால் புலிகள் மக்களின் நடமாட்டத்தை நன்றாக அவதானித்து அங்கிருந்து வெளியேற முற்பட்ட பலரை கொன்றதை கண்ணுற்று தமக்கும் அக்கதி ஏற்படும் என்ற பயத்தில் அங்கு தொடர்ந்தும் தங்கியிருந்ததுடன் கடந்த இரு தினங்களில் அங்கிருந்த 90 சதவீதமான மக்கள் வெளியேறி விட்டதாகவும் மேலும் அங்கு 10000 தொடக்கம் 15000 மக்கள் எஞ்சியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment