Thursday, April 9, 2009

புலிகளின் விசமப் பிரச்சாரம் என்கின்றது இலங்கை இராணுவம்.



புதுக்குடியிருப்பில் புலிகளிடம் எஞ்சியிருந்த பகுதியை பைப்பற்றுவதற்கு படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 400 க்கும் மேற்பட்ட படையினர் உயிரிழந்திருந்தனர். இத்தாக்குதலில் தமது இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாத புலிகள் இராணுவத்தினர் தடைசெய்யப்பட்ட இரசாயனக் குண்டுகளைப் பாவித்ததாக குற்றஞ்சாட்டியிருந்ததுடன் புலிகளின் ஊடகங்கள் இவற்றை பாரிய அளவில் பிரச்சாரமும் செய்து வந்தது.

இந்நிலையில் இலங்கை ராணுவம் அவ்வாறு தாம் எவ்வித தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையும் பாவிக்கவில்லை எனவும் தமது படையினரின் மனோபலத்தின் மூலமே இவ்வெற்றியை அடைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. மேலும் உலகிலேயே அதி நவீன பயங்கரவாத இயக்கமாக இனம்காணப்பட்டுள்ள புலிப்பயங்கரவாதிகளை எவ்வித தடையும் இன்றி வெற்றிகரமாக அழித்து உலகிலே உள்ள ஏனைய இராணுவங்களுக்கு தமது படை எடுத்துக்காட்டாக செயல்படுவதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment