யுத்த சூனியப் பிரதேசத்தினுள் தாக்குதல் நடாத்துவதை நிறுத்துங்கள். அமெரிக்கா
யுத்த சூனியப் பிரதேசத்தில் இடம்பெறுகின்ற மக்களைப் பாதிக்கின்ற பாரபட்டமற்ற தாக்குதல்களை தாக்குதல்களை நிறுத்துமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசை அமெரிக்க அரசு கேட்டுள்ளது. அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ரொபேர்ட் வூட் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பிளேக் அரசியல் தீர்வொன்றை நோக்கி நகருமாறு இலங்கை அரசிற்கு நெருக்குதல்களை கொடுத்துக்கொண்டிருக்கின்ற அதேநேரத்தில் யுத்தி சூனியப் பிரதேசத்தில் இருதரப்பினரும் பாரபட்டமற்ற தாக்குதல்களை நாடாத்துகின்றனர். இத்தாக்குதல்களில் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ஆகையால் நாம் இருதரப்பையும் யுத்த சூனியப் பிரதேத்தினுள் தாக்குதலில் ஈடுபடுவதை தவிர்குமாறு வேண்டுகின்றோம். அத்துடன் அப்பிரதேசத்தில் இருந்து வெளியேற முற்படும் சிவிலியன்கள் மீது புலிகள் தாக்குதல் நாடாத்துகின்றார்கள் என்பதை நாம் தெளிவாக விளங்கிக்கொண்டுள்ளோம். எனவே தமிழீழ விடுதலைப் புலிகள் அந்த மக்களை தாம் விரும்பிய பிரதேசங்களை நோக்கி நகர அனுமதிக்க வேண்டும் என வேண்டுகின்றோம். ஐ.நா செயலாளர் நாயகம் தமது செயற்பாட்டாளர்களை யுத்த சூனியப்பிரதேசத்திற்கு அனுப்பி அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவைகளை கவனிக்கவேண்டும் என வேண்டுகின்றோம்.
அத்துடன் ஐ.சி.ஆர்.சி யினரின் அறிக்கையின் படி 50000 மக்கள் யுத்த சூனியப்பிரதேசத்தில் எஞ்சியுள்ளனர். சிறிலங்கா அரசு ஐ.நா, ஐ.சி.ஆர்.சி மற்றும் உள்ளுர், சர்வதேச தொண்டர் நிறுவனங்களை யுத்த சூனியப்பிரதேசத்தில் எஞ்சியுள்ள மக்களுக்கு உதவ அனுமதிக்க வேண்டும் என வேண்டுகின்றோம் என தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களுடனான திரு. ரொபேர்ட் வூட் இன் பேச்சை கேட்க இங்கு அழுத்தவும்
0 comments :
Post a Comment