Monday, April 6, 2009

தோற்றுப்போகும் ஐரோப்பிய பொருளாதாரம். - ஹரிஹர ஸர்மா -

எப்போதுமே தங்களை நம்பர் ஒன் எனச்சொல்லிக் கொண்டிருந்த உலகின் முகடுகள் முழி பிதுங்கி பாரிய பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து பழைய கணக்கு புத்தகங்களை தேடிக் கொண்டிருக்கின்றனர். இவ்வளவு காலமும் மேக்கப் போட்டு வந்தவர்கள் இப்போதுதான் அடி வயிற்று அல்சருக்கு கசாயம் காய்ச்ச வைத்தியர்களைத் தேடத் தொடங்கியுள்ளனர். நம்மைவிட சைனா முந்திவிடுவானோ, சைனாவையும், ஜப்பானையும் இந்தியா முழுங்கி விடுமோ என உள்ளதை எல்லாம் அடுத்த வீட்டுக்காறனை உளவு பார்ப்பதில் செலுத்திவிட்டு உள்ளுக்குள்ளேயே புரையோடியுள்ள நிதி வீழ்ச்சிக்கு குறை நிறைப்பு பிரேரனைகளும், கிடுக்கிப் பிடி சட்டங்களும் இயற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் எல்லாவற்றுக்கு ஆப்பு வைக்கும் கில்லாடிகள் தங்கள் பயணத்தை நிறுத்துவதாக இல்லை. வங்கிகளில் போலிக் கணக்கு திறந்து கடன் எடுப்பது, இன்னொருவரின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை அவருக்கு தெரியாமல் கள்ள அட்டை பயன் படுத்தி எடுப்பது, இன்னொருவரின் வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் அவரது வங்கிக் காசாலை போல் போலி காசோலை செய்து எடுப்பது, அமெரிக்க , ஐரோப்பிய வங்கிகளில் உள்ள பாரிய கம்பனிகளின் பணங்களை மாதிரிக் காசோலைகள் தயாரித்து எடுப்பது, பெரிய பண முதலைகளின் பணங்களை "ஒன் லைன் ட்ரக்கிங் சிஸ்டம்" ஊடாக ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு மாற்றுவது, வாடகை வீட்டில் வீட்டு உரிமையாளருக்கு தெரியாமல். வீட்டை எவ்வித தடங்கலுமின்றி விற்பது என பாரிய மோசடிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இவைகளை அவ்வப் பகுதி கிரிமினல் குற்ற வாளிகளின் துணையுடன் உலகின் பிரபல்யமான தீவிரவாத அமைப்புகளே நடாத்திக் கொண்டிருக்கின்றன. நான் இங்கு உண்மையாக போராடுபவர்களை குறிக்கவில்லை. போராட்டம் என்ற பெயரில் மக்களை மாக்களாக பயன்படுத்தும் கேடுகெட்ட சில தலைமைகளை சொல்கின்றேன்.

போன மாதம் கலிபோர்னியாவில் ஒரே நேரத்தில் இரண்டு வாடகை வீட்டுக்கு ஆறுலட்சத்தி நாற்பதினாயிரம் டொலர் கடன் எடுக்கப்பட்டுள்ளது. எப்படியும் .உங்கள் வீடுகளில் வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கு நிச்சயமாக உங்கள் பெயரும் முகவரியும் தெரிந்திருக்கும். இந்த பெயர் விபரங்களை தங்களது பினாமி வக்கீல்களுக்கு கொடுத்து தங்களுக்கு வேண்டிய இன்னொருவர் வீடு வாங்க இருப்பது போல் குறிப்பிட்டு மோர்கேஜ் வங்கிகளை அணுகுவார்கள். வங்கி குறித்த வீட்டின் பெறுமதி அறிய 'வெலுவேஷன் ஒபீஷர்களை' வீட்டின் பெறுமதியை பார்வையிட அனுப்புவார்கள். வெலுவேஷன் ஒபீசர் வரும்போது வாடகைக்கு குடியிருப்பவரே அங்கு இருப்பார். வரும் அந்த அதிகாரி வீட்டின் உரிமையாளர் எங்கே? என கேட்பார். அவர் வெளியே போய்விட்டார். நீங்கள் வருவதாகச் சொன்னார். நீங்கள் வீட்டை பார்வையிடலாம் என்றதும். அவர் வீட்டை சுற்றவர பார்த்துவிட்டு "வீட்டை பார்வையிட்டேன், மூன்று லட்சம் கொடுக்கலாம்" என தனது வங்கிக்கு குறிப்பணுப்புவார். அடுத்த ஒரு வாரத்தில் பணம் தருகிறோம் நீங்கள் 20 வீதம் டிப்போஷிட் (வங்கி 80 வீதம்தான் கடன் வழங்கும்) பண்ண வேண்டும் என்றதும். இவர் இருபது வீதம் வங்கியில் வைப்பிட வங்கி வீட்டுக்குரிய மொத்த பணத்தையும் குறிப்பிட் வக்கீலுக்கு காசோலையாக அனுப்பி வைக்கும். அவர்களுடாக பணம் தீவிரவாத அமைப்புக்கு சுளையாக போய் சேரும். பணம் வந்து ஓரிரு வாரத்தில் அவர்கள் வீட்டை காலி செய்து விடுவர். விடயம் வீட்டு உரிமையாளருக்கு தெரிய வர நான்கு மாதம் எடுக்கும். அதற்கிடையில் பணம் எங்கெங்கோ போய் என்னன்னவெல்லாமோ நடக்கும். அமெரிக்காவிலும் மற்றுமொரு நாட்டிலும் இது மிக ஜரூராக இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. வீடுகளை வாடகைக்கு கொடுக்கும் அன்பர்களே மிக மிக ஜாக்கிரதை.

உங்கள் வங்கியில் ஐயாயிரம் டாலருக்கு மேல் வைப்பிலிருந்தால் மிகமிக ஜாக்கிரதை.
வங்கியில் பணம் எவ்வளவும் இருக்கலாம். ஆனால் உங்கள் கணக்கு இலக்கம் அத்துடன் உங்கள் காசோலை இலக்கம் மேற்படி அமைப்புகளுக்கு தெரிந்தால் அதே மாதிரி போலி காசோலை செய்து தங்களுக்கு வேண்டிய போலிக்கணக்கில் அந்த காசோலை வைப்பிலிடப்பட்டு 3 தினத்தில் உங்கள் பணம் மொத்தமும் அம்பேல். இதனால் உங்களுக்கு எவ்வித நஷ்டமுமில்லை.நீங்கள் போய் வங்கியில் முறையிட்டு வங்கியிடம் பணத்தை பெற்று விடுவீர்கள்.

வங்கிதான் வருட முடிவில் திரு திரு என முழிக்கும். இவ்வாறு தினமும் பல மில்லியனை ஐரோப்பிய வங்கிகள் இழந்து கொண்டிருக்கிறது. சில கெட்ட வங்கி ஊழியர்களின் உதவியுடன்
வாடிக்கiயாளரின் வங்கி மீதியை இலகுவாக அறிந்து மில்லியன்ஸ், பில்லியன்ஸ்களை இந்த வங்கிகள் இழந்துவிட்டு முழி பிதுங்கி நிற்கின்றன. சென்ற மாதம் மட்டும் இங்கிலாந்தில் உள்ள
ஹலிபக்ஸ், அபே நெஷனல், நற்வெஸ்ட் வங்கிகளிலிருந்து மட்டும் ஒரு மில்லியன் பவுண்ஸ்களுக்கு மேல் இவ்வாறு திருடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து பாரிய பண முதலைகளின் வங்கிகளில் உள்ள பணத்தை "ஹக்கிங் சிஸ்டம்" ஊடாக தங்கள் பினாமி கணக்குகளுக்கு இரவோடிரவாக மாற்றி அடுத்த கணமே அதை 20 ஆயிரம் 30 ஆயிரம் டொலர்களாக இன்னொரு நாட்டிலுள்ள தங்கள் பினாமிகளின் கணக்குகளுக்கு மாற்றி விடுவர். அடுத்த 48 மணி நேரத்தில் அது குறிப்பிட் ஐரோப்பிய வங்கிகளில் பணமாக வந்து நிற்கும். பின்னர் தங்களுக்கு வேண்டிய பாரிய மொத்த விற்பனை நிலையங்கள், நகைகடைகளில் பணமாக மாற்றப்படும்.

இவ்வாறு தினமும், ஒவ்வொரு நிமிடமும் நடந்து கொண்டே இருக்கின்றது. இவைகளை உடன் தடுக்க இங்குள்ள எந்த அரசுக்கும் பலமில்லை என்றே தோன்றுகிறது காரணம். இங்குள்ள சட்டங்களும் அதற்குள் உள்ள சட்ட நெளிவுகளும் பாரிய கிடுக்கிப் பிடிகளை வைத்துள்ளன.

உதாரணமாக இங்கிலாந்தை எடுத்துக் கொண்டால் இவ்வாறான தவறுகளை அவர்கள் கணக்கில் எடுப்பதே இல்லை. இங்குள்ள பொலிசார் இது எங்களது பிரச்சனை இல்லை. வங்கியிடம்தான் முறையிட வேண்டும் என சட்டம் சொல்கிறது என்பர். வங்கியில் இதற்கென இன்வெஸ்டிகேஷன் ரீம் இருக்கும். அவர்கள் இதை ஒரு பொருட்டாகவே எடுப்பதில்லை. இழப்புகளை இன்ஸ்யூரன்ஸ் கம்பனிகளில் வங்கிகள் இலகுவாக வாங்கிக் கொள்ளும். "சீரியஸ் புறவுட் இன்வெஸ்டிகேஷன் ரீம்'(எஸ்.எப்.ஓ) என்று ஒன்று இருக்கிறது. இவர்கள் வங்கி ஊழல்களை விசாரிப்பவர்கள்.

இவர்களோ நாங்கள் பத்து மில்லியன்களுக்கு மேல் தவறு நடந்தால்தான் தட்டிக் கேட்போம்.
இதை கவனிக்க எங்களுக்கு நேரமில்லை என பெரிய மீன் தேடப்போய் விடுவர். எம்பீக்களோ இதை பாராழுமன்றத்தில் தட்டிக் கேட்கின்றோம் என தட்டிக் கழித்து விடுவர். பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்க இருக்கிற 'சிஸ்கெரியர்'க்கு அல்கய்தா பயங்கரவாதம்தான் பெரிய பிரச்சனையே தவிர மொத்த ஐரோப்பிய பணத்தையும் மக்களையும் சுரண்டும் எவரைப்பற்றியும் கவலையே இல்லை.இதனால் இங்கிலாந்தில் தினமும் திருட்டு கன கச்சிதமாக நடக்கிறது.

சிறு துளி பெருவெள்ளம் கணக்காக மொத்தமாக ஒரு நாள் வேலையில்லை,வங்கியில் பணமில்லை என பிரச்சனை வரும் போது அனைத்து தரப்பினரும் வந்து அரசையும், ஆளும் தரப்பையும் குறை கூறி சந்தி சிரிக்கச் செய்து விடுவர்.இவ்வாறான கீழ்த்தரமான,நீதிக்குப்
புறம்பான இரண்டு அல்லது மூன்று சதவிதமான ஒரு சிலரின் செயல்களால் மொத்த நாடுமே
பாதிப்படைவதுடன் சாதாரண உண்மையான நேர்மையான மக்களின் எதிர்காலம்தான் கேள்விக்
குரியதாகிறது.

கடந்த ஒரு வருடமாக உலகமே கிறடிட் கிறன்ஜ்.வங்கிகளெல்லாம் ரொம்பஸ்ரிக் ஆகிவிட்டன என அழுது கொண்டிருக்கின்றன.ஆனால் எல்லாத் தில்லு முல்லுகளும் வழமை போல் முன்னரைவிட இலகுவாக தினமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பாவம் நமது பொருளாதாரம்.

6-4-2009



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com